Vaayadi Petha Pulla Song Lyrics

Vaayadi Petha Pulla Song Lyrics in Tamil from Kanaa Movie. Vaayadi Petha Pulla Song Lyrics has penned in Tamil Font by GKB.

படத்தின் பெயர்கனா
வருடம்2018
பாடலின் பெயர்வாயாடி பெத்த புள்ள
இசையமைப்பாளர்திபு நினன் தாமஸ்
பாடலாசிரியர்ஜி.கே.பி
பாடகர்கள்ஆராதனா சிவகார்த்திகேயன்,
சிவகார்த்திகேயன்,
வைகோம் விஜயலட்சுமி
பாடல் வரிகள்:

பெண்: வாயாடி பெத்த புள்ள
வரப்போறா நெல்லப் போல
யார் இவ யார் இவ

பெண்: கையில சுத்தற
பெண் & குழு: காத்தாடி
பெண்: காத்துல ஆடுது
பெண் & குழு: கூத்தாடி
பெண்: கண்ணுல கலரா
பெண் & குழு: கண்ணாடி
பெண்: வம்புக்கு வந்து நிப்பா யார் இவ
பெண் & குழு: யார் இவ

பெண்: ஹான் ஹான்

ஆண்: யார் இந்த தேவதை
ஆனந்த பூ மக
வால் மட்டும் இல்லையே
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி

ஆண்: யார் இந்த தேவதை
ஊர் கொஞ்சும் என் மக
நீ எந்தன் சாமிதான்
என்ன பெத்த சின்ன தாயே

குழு: அண்ண கிளியே வண்ண குயிலே
குட்டி குறும்பே கட்டு கரும்பே

பெண்: ஹான் ஹான்

குழு: செல்ல கிளியே சின்ன சிலையே
எந்தன் நகலாய் பிறந்தவளா ஹே…

பெண்: அப்பனுக்கு ஆஸ்தியும் நான்தானே
ஆசையா வந்தே பொறந்தேனே
வானத்தில் பட்டமா ஒசரக்க பறந்தேனே

பெண்: எனக்கு இருக்கும் கனவு எல்லாமே
நிலவுகிட்ட சொல்லி வைப்பேனே
வாசத்தில் விலையுற வயல போல் இருப்பேனே.

குழு: பொட்டப்புள்ள நெனப்புல
பசி எனக்கில்ல
இவ சிரிப்புல மயிலே.
வானவில்லின் கொடைகுள்ள
வாழ பஞ்சமில்லை
இடி மின்னல் இவ கூட
பாட்டு கட்டி ஆடும்

ஆண்: யார் இந்த தேவதை
பெண் : தானனான
தன்னான னான
வால் மட்டும் இல்லையே

ஆண்: ஆச மக என்ன செஞ்சாலும்
அதட்ட கூட ஆச படமாட்டேன்
என் மக ஆம்பள
பத்துக்கு சமம்தானே

ஆண்: செவுத்து மேல
பந்த போலத்தான்
சனியையும் சுழட்டி அடிப்பாளே
காளைய கூடவும்
அண்ணனா நெனைப்பாலே

ஆண் & குழு: எப்பவுமே செல்ல புள்ள
விளையாட்டு புள்ள
ரெட்டை சுழி புள்ள அழகே
பெத்தவங்க முகத்துல
ஒரு சிரிப்புல
ஆச பொண்ணு ஆயுள்தானே
கூடிக்கிட்டு போகும்

குழு: வாயாடி பெத்த புள்ள
வரப்போறா நெல்லப் போல
யார் இவ யார் இவ

குழு: கையில சுத்தற காத்தாடி
காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ யார் இவ

ஆண் & குழு: யார் இந்த தேவதை
ஆனந்த பூமக
வால் மட்டும் இல்லையே
பெண்: சேட்டைக்கெல்லாம்
சொந்தக்காரி

ஆண் & குழு: யார் இந்த தேவதை
ஊர் கொஞ்சும் என் மக
நீ எந்தன் சாமிதான்
என்ன பெத்த சின்ன தாயே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *