Vaaney Vaaney Song Lyrics in Tamil

Vaaney Vaaney Song Lyrics in Tamil from Viswasam Movie. Vaaney Vaaney Song Lyrics penned in Tamil by Viveka. Neethane Ponjathi Song Lyrics.

படத்தின் பெயர்விஸ்வாசம்
வருடம்2019
பாடலின் பெயர்வானே வானே
இசையமைப்பாளர்டி.இமான்
பாடலாசிரியர்விவேகா
பாடகர்கள்ஹரிஹரன், ஸ்ரேயா ஹோசல்
பாடல் வரிகள்:

குழு: மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன கேத்துனா
கண்டே பத்நாமி சுபகேத்தவம்
ஜீவா சரதாம் சதம்

பெண்: வானே வானே வானே
நானுன் மேகம் தானே
வானே வானே வானே
நானுன் மேகம் தானே

பெண்: என் அருகிலே கண் அருகிலே
நீ வேண்டுமே
மண் அடியிலும் உன் அருகிலே
நான் வேண்டுமே

பெண்: சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
என்ன முடியாதஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

ஆண்: நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி

ஆண்: நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
பெண்: வானே வானே வானே
நானுன் மேகம் தானே

ஆண்: இனியவளே
உனது இரு விழி முன்
பழரச குவளையில்
விழுந்த எறும்பின் நிலை
எனது நிலை விலக
விருப்பம் இல்லையே பூவே

பெண்: அதிசயனே
பிறந்து பல வருடம்
அறிந்தவை மறந்தது
எனது நினைவில் இன்று
உனது முகம் தவிர
எதுவும் இல்லையே அன்பே

ஆண்: வேறாரும் வாழாத
பெரு வாழ்விது
நினைத்தாலே மனம் எங்கும்
மழை தூவுது

பெண்: மழலையின் வாசம் போதுமே
தரையினில் வானம் மோதுமே
ஒரு கணமே உன்னை பிரிந்தால்
உயிர் மலர் காற்று போகுமே

ஆண்: நீதானே…
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண்: பொஞ்சாதி
பெண்: ஹ்ம்ம் ம்ம்
ஆண்: நானே உன்
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண்: சரிபாதி

ஆண்: நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
பெண்: வானே வானே வானே
நானுன் மேகம் தானே

ஆண்: என் அருகிலே கண் அருகிலே
நீ வேண்டுமே
பெண்: மண் அடியிலும் உன் அருகிலே
நான் வேண்டுமே

ஆண்: சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
பெண்: என்ன முடியாத ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே

ஆண்: நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாத

ஆண்: நீதானே
குழு: நீதானே
ஆண்: பொஞ்சாதி
குழு: பொஞ்சாதி
ஆண்: நானே உன்
குழு: நானே உன்
ஆண்: சரிபாதி
குழு: சரிபாதி

பெண்: வானே…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *