Unnodu Vaazhum Song Lyrics in Tamil from Rudhran Movie. Unnodu Vazhum or Unnodu Vaazhum Song Lyrics has penned in Tamil by Kabilan.
பாடல்: | உன்னோடு வாழும் |
---|---|
படம்: | ருத்ரன் |
வருடம்: | 2023 |
இசை: | GV பிரகாஷ் குமார் |
வரிகள்: | கபிலன் |
பாடகர்: | சித் ஸ்ரீராம் |
Unnodu Vaazhum Lyrics in Tamil
உன்னோடு வாழும்
இந்த காலம் போதும் பெண்ணே
உன் வாசும் தீண்டும்
இந்த நாட்கள் போதும் கண்ணே
நீல வானம் நீயாடி
உனை நீங்கினால் உயிர் ஏதடி
நீதானே யாரும் இல்லா நெஞ்சில்
தேடி வந்த சொந்தம் நீதானே
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று
ஓசை மின்னல் போல ஆனேனே
உன்னோடு நான் என்னோடு நீ
ஒன்றாகவே உயிர் வாழ்வோமே
தாயாக நீ தனியாக நான்
கண்ணோடு நீ கலங்காமல் நான்
என் தாயின் இரண்டாம் பாகம்
கண்டேன் எந்தன்
காதல் பெண்ணாலே
அழகே அழகின் முதலே
என் தேவை யாவும் இந்த
மண்ணில் கண்டேன்
பெண்ணே உன்னாலே
நிலவே நிலவின் பகலே
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று
ஓசை மின்னல் போல ஆனேனே
தண்ணீரிலே விண்மீன்களாய்
உன் கண்களை நான் காண்கிறேன்
ஆகாயம் நீ அதிகாலை நான்
வீட்டோடு நீ விளையாட நான்
வெறென்னே வேண்டும் பெண்ணே
நெஞ்சில் உள்ள ஆசை என்னவோ
உலகம் முழுதும் உனதே
கைநீட்டும் தூரம் எல்லாம்
உன்னை மட்டும் தொட்டு கொள்ளவே
மறுநாள் கனவும் உனதே
நீதானே யாரும் இல்லா நெஞ்சில்
தேடி வந்த சாெந்தம் நீதானே
உன்னாலே ஊமை நெஞ்சம் இன்று
ஓசை மின்னல் போல ஆனேனே
Short Notes
“உன்னோடு வாழும்” என்ற பாடலானது 2023 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “ருத்ரன்” என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் “ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ்” ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையினை KP திருமாறன் எழுத, S கதிரேசன் தனது ” Five Star Creations” நிறுவனத்தின் கீழ் தயாரித்து இயக்கியுள்ளார்.
இதனை RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படத்தொகுப்பு பணிகளை அந்தோணி மேற்கொண்டுள்ளார்.
சாம் CS திரைப்படத்தின் பின்னணியை இசையமைத்துள்ளார். GV பிரகாஷ் குமார், தரன் குமார், ofRo ஆகியோர் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர்.
கண்ணதாசன், கபிலன், கருணாகரன், அசல் கோலார் ஆகியோர் இப்படத்தின் பாடல் வரிகளை இயற்றியுள்ளனர்.
சத்யபிரகாஷ், நித்யஸ்ரீ வெங்கடராமன், Emcee D, திவாக்கர், சித் ஸ்ரீராம், அசல் கோலார் முதலானோர் இதன் பாடல்களை பாடியுள்ளனர்.
இது தமிழ் புத்தாண்டு தினமான 14 April 2023 அன்று திரையரங்குகளில் வெளியானது. மேலும் ருத்ரன் திரைப்படம் பற்றி அறிய Wikipedia மற்றும் IMDb.