Uchi Pillayar Song Lyrics in Tamil

Uchi Pillayar Song Tamil Lyrics from Vinayagar Songs. Uchi Pillayar Song Lyrics has penned in Tamil by Tamil Nambi. Uchi Pillayar Lyrics.

பாடல் வரிகள்:

உச்சி பிள்ளையார்
கோவில் கொண்ட இடம்
திருச்சி மலையினிலே

நம் அச்சம் நீங்கவும்
ஆனந்தம் பெருகவும்
அமர்ந்தார் மனதினிலே

உச்சி பிள்ளையார்
கோவில் கொண்ட இடம்
திருச்சி மலையினிலே

நம் அச்சம் நீங்கவும்
ஆனந்தம் பெருகவும்
அமர்ந்தார் மனதினிலே

சச்சிதானந்த சர்க்குருவாகியே விமலன்
புவி தந்தையானபின் தாயுமான திரு நகரம்
சச்சிதானந்த சர்க்குருவாகியே விமலன்
புவி தந்தையானபின் தாயுமான திரு நகரம்

அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன்
அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன்
எங்கள் யானை முகம் கொண்ட
ஆதி நாத்தனாம் இறைவன்

அருள் உச்சி பிள்ளையார்
கோவில் கொண்ட இடம்
திருச்சி மலையினிலே

நம் அச்சம் நீங்கவும்
ஆனந்தம் பெருகவும்
அமர்ந்தார் மனதினிலே

பாடுதலும் அடி பரவுதலும்
தொழிலாகும்
துணை நாடுதலும் அருள் நன்னுதலும்
நினைவாகும்

பாடுதலும் அடி பரவுதலும்
தொழிலாகும்
துணை நாடுதலும் அருள் நன்னுதலும்
நினைவாகும்

கூடுதலும் கரம் கூப்புதலும்
நமதெண்ணம்
கூடுதலும் கரம் கூப்புதலும்
நமதெண்ணம்
வினை ஓடுதலும் பகை ஒடுங்குதலும்
இனி திண்ணம்

அருள் உச்சி பிள்ளையார்
கோவில் கொண்ட இடம்
திருச்சி மலையினிலே

நம் அச்சம் நீங்கவும்
ஆனந்தம் பெருகவும்
அமர்ந்தார் மனதினிலே

உச்சி பிள்ளையார்
கோவில் கொண்ட இடம்
திருச்சி மலையினிலே

நம் அச்சம் நீங்கவும்
ஆனந்தம் பெருகவும்
அமர்ந்தார் மனதினிலே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *