Sirukki Seenikatti Song Lyrics in Tamil from Kappan Movie. Sirukki Seenikatti Song Lyrics has penned in Tamil by Gnanakaravel.
படத்தின் பெயர் | காப்பான் |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | சிறுக்கி சீனி கட்டி |
இசையமைப்பாளர் | ஹாரிஸ் ஜெயராஜ் |
பாடலாசிரியர் | எஸ். ஞானகரவேல் |
பாடகர்கள் | செந்தில் கணேஷ், ரமணியம்மாள் |
பாடல் வரிகள்:
பெண்: பச்சை ஊதா மஞ்ச வெள்ள
மச்சான் வந்தானே மச்சினிக துள்ள
பச்சை ஊதா மஞ்ச வெள்ள
மச்சான் வந்தானே மச்சினிக துள்ள
பெண்: மூச்சு கீச்சு மூட்டி செல்ல
இங்க மச்சக்காரன் வாரான் பாரு அள்ள
பெண்: இவன் இச்சு தந்தா பிச்சுக்குமே மூள
ஐயோ மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள
ஆமா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள
யம்மா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள
பெண்: ராக்காயி மூக்காயி காக்காயி ராமாயி
எங்கடி போனீங்க… சோமாறி
ஆண்: ஹேய் சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி
அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி
அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
ஆண்: வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே
ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே
கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாளே
ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம காஞ்சு நின்னாளே
ஆண்: தெனமும் ரோட்டு மேல ரூட்டு விடும் போக்கு நல்லால
அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நான்தான்லே
பெண்: சிறுக்கி… ஏலா…சிறுக்கி…
ஆண்: சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி
அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி
அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
ஆண்: கட்டம் போட்ட சிலுக்கு சட்ட முட்டி மேல கைலி கட்டி
வெட்ட வெளி புயல போல சுத்தி வர நாடோடி
சப்பி போட்ட பனம் பழமா நட்டுக்கு நிக்கும் கோரமுடி
பச்ச புள்ள கஞ்சி குடிக்க நான்தான் இப்ப பூச்சாண்டி
ஆண்: வேப்பங்குச்சி மறந்த அப்பத்தா
உன் பொக்கையில பல் முளைக்க வெக்கட்டா
கேப்பை சோளம் நெல்லே போச்சேத்தா
நீ பீசா தின்னு போலாங்காட்டி என்னாத்தா
ஆண்: சிறுக்கி சீனிகட்டி சிணுங்கி சிங்காரி
அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி
அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
ஆண்: கம்மாக்கரை களத்துமேடு
நெல்லு விளையும் பச்ச காடு
கட்டடமா மொளச்சு நின்னா
கல்ல திங்க போற நீ
ஆண்: ஒத்த குடம் தண்ணி புடிக்க
மல்லுக்கு நிக்கும் பொம்பளைங்க
ஒத்துமையா பொங்கி எழுந்தா
ஓடி வரும் காவேரி
ஆண்: காசு பவுசு தூக்கி கடாசு
நீ செத்தாலும் வெடிப்பாங்க பட்டாசு
மாசு மவுசு போனா வராது
அட அவுச்ச முட்ட ஆம்லெட் ஆக மாறாது
பெண்: சிறுக்கி சீனி கட்டி சிணுங்கி சிங்காரி
அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி
குழு: முட்டுது கீறி
பெண்: மினுக்கி மீனுக்குட்டி தழுக்கி ஒய்யாரி
அவ ஒத்த ஜடை பின்னழகு எத்தனை கோடி
ஆண்: ஹேய் வனஜா கருப்பனோட ஊர மேஞ்சாளே
ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே
கிரிஜா கோயிலதான் சுத்தி வந்தாளே
ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம காஞ்சு நின்னாளே
ஆண்: தெனமும் ரோட்டு மேல ரூட்டு விடும் போக்கு நல்லால
அவள வால ஒட்ட நறுக்க வந்த கதிரு நான்தான்லே
ஆண்: கதிரு….க க கதிரு கதிரு….க க கதிரு