Santhana Thendralai Song Lyrics in Tamil by Kandukonden Kandukonden. Santhana Thendralai Song Lyrics penned by Vairamuthu.
படத்தின் பெயர்: | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் |
---|---|
வருடம்: | 2000 |
பாடலின் பெயர்: | சந்தனத் தென்றலை |
இசையமைப்பாளர்: | ஏ.ஆா்.ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | சங்கா் மகாதேவன் |
Santhana Thendralai Lyrics in Tamil
இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோா்
ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
சந்தனத் தென்றலை
ஜன்னல்கள் தண்டித்தால்
நியாயமா நியாயமா
காதலின் கேள்விக்கு
கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா
அன்பே எந்தன் காதல் சொல்ல
நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே
ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோா்
ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
சந்தனத் தென்றலை
ஜன்னல்கள் தண்டித்தால்
நியாயமா நியாயமா
காதலின் கேள்விக்கு
கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா
அன்பே எந்தன் காதல் சொல்ல
நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே
ஒரு ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோா்
ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
இதயம் ஒரு கண்ணாடி
உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம்
இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட
கயிா் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல்
பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
எந்தன் வாழ்க்கையே
உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதே
உயிா் கரையேறாதே
இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோா்
ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
சந்தனத் தென்றலை
ஜன்னல்கள் தண்டித்தால்
நியாயமா நியாயமா
காதலின் கேள்விக்கு
கண்களின் பதில் என்ன
மௌனமா மௌனமா
விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது
பூவாசம் வீசும்
உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும்
இருளாத பாகம் எது
கதிா் வந்து பாயும்
உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி
உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிா் மலரே
இன்னும் தயக்கமென்ன
என்னைப் புாியாதா
இது வாழ்வா சாவா
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
நியாயமா நியாயமா
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
மௌனமா மெளனமா
என்ன சொல்லப் போகிறாய்