Neeye Oli Song Lyrics in Tamil

Neeye Oli Song Lyrics in Tamil from Sarpatta Parambarai Movie. Neeye Oli Neethan Vali Song Lyrics has penned in Tamil by Arivu.

படத்தின் பெயர்:சார்பட்டா பரம்பரை
வருடம்:2021
பாடலின் பெயர்: நீயே ஒளி நீதான் வலி
இசையமைப்பாளர்:சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்:அறிவு
பாடகர்கள்:அறிவு, சந்தோஷ் நாராயணன்

பாடல் வரிகள்:

நீயே ஒளி நீதான் வழி
ஓயாதினி ஒடம்பே
நீயே தடை நீயே விடை
சூடாக்கிடு நரம்பே

சொட்டும் வேர்வை
தினம் சொல்லும் உனக்கொரு தீர்வை
அச்சம் போர்வை
அதை விட்டு இலக்க நீ சேர்வை

முன்னாடி வை கால
பரம்பர நிமிரும் உன்னால
முன்னேறி வை கால
தலமுறை எழுதும் உன் பேர

கடலா பொங்குது ரோசம்
விளையாடு உனக்கோசம்
தடை சொல்லா தாய்பாசம்
நீ ஜெயிக்கனும் அதுக்கோசம்

கடலா பொங்குது ரோசம்
விளையாடு உனக்கோசம்
தடை சொல்லா தாய்பாசம்
நீ ஜெயிக்கனும் அதுக்கோசம்

நீயே ஒளி நீதான் வழி
ஓயாதினி ஒடம்பே
நீயே தடை நீயே விடை
சூடாக்கிடு நரம்பே

ஏறு ஏறு ஏறு ஏறு
ஏறு ஏறு நீ மேல
இங்க யாரு யாரு யாரு
யாருமில்ல உன்போல

உருக்குலைந்த உடம்ப உசுப்பு
இருளடைந்த எலும்ப எழுப்பு
இனி குணிந்த இடத்தில்
நிமிர்ந்து சனத்தை தெரட்டு

ஒனக்கு நீதான் எல்ல
தொணைக்கு யாரும் இல்ல
அடிடா அடிமை உணர
இடிடா இமயம் தெணர

அடிடா அடிமை உணர
இடிடா இமயம் தெணர
அடிடா அடிமை உணர
இடிடா இமயம் தெணர

நீயே ஒளி நீதான் வழி
ஓயாதினி ஒடம்பே
நீயே தடை நீயே விடை
சூடாக்கிடு நரம்பே

ஆயுதம் அது ஒன் மூச்சு
நீ ஆடுற நொடி இதுவாச்சு
பேரலை நீயென ஓடிவா
ரோசமா யாரையும் மோதிவா

கருவில் பிறந்தாடும் போர் குணம்
உன் எதிரி வியந்து உனை பாக்கனும்
நம் கதைய வருங்காலம் கேக்கனும்
நீ சண்டையிடு நம்ம ஜெயிக்கனும்

உன் காயம் போக்க தாயும் உண்டு
உன் வேகம் கூட்டு நியாயம் உண்டு
நீ சாயும் தோளில் ஆளும் உண்டு
இது உன் காலம் காட்டு நீ யாரென்று

நீயே ஒளி நீதான் வழி
ஓயாதினி

நீயே ஒளி நீதான் வழி
ஓயாதினி ஒடம்பே
ஏய் நீயே ஒளி நீதான் வழி
ஓயாதினி ஒடம்பே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *