முகம் காட்டு நீ பாடல் வரிகள் | Mugam Kaattu Nee Song Lyrics in Tamil

Mugam Kaattu Nee Song Lyrics in Tamil from Maragatha Naanayam Movie. Mugam Kaattu Nee Song Lyrics penned in Tamil by GKB.

பாடல்:முகம் காட்டு நீ
படம்:மரகத நாணயம்
வருடம்:2017
இசை:திப்பு நினன் தாமஸ்
வரிகள்:GKB
பாடகர்:பிரதீப் குமார்

Mugam Kaattu Nee Lyrics in Tamil

நீ கவிதைகளா கனவுகளா
கயல்விழியே
நான் நிகழ்வதுவா கடந்ததுவா
பதில் மொழியே

உன்னோடு நெஞ்சம்
உறவாடும் வேளை
தண்ணீர் கமலம் தானா

முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
என் எல்லையே

இதழோரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே

மழையோடு நனையும்
புது பாடல் நீதான்
அழகான திமிரே
அடியே அடியே

காற்றோடு பரவும்
உன் வாசம் தினமும்
புது போதை தானே
சிலையே அழகே
அழகே…

நான் உனக்கென்னவே
முதல் பிறந்தேன்
இளங்கொடியே

நீ எனக்கென்னவே
கரம் விரித்தாய்
என் வரமே

மந்தார பூப்போல
மச்சம் காணும் வேல
என்னத்த நான் சொல்ல
மிச்சம் ஒன்னும் இல்ல

முழு மதியினில்
பனி இரவினில்
கனி பொழுதினில் ஓடாதே

முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
என் எல்லையே

இதழோரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே

நீ கவிதைகளா கனவுகளா
கயல்விழியே
நான் நிகழ்வதுவா கடந்ததுவா

உன்னோடு நெஞ்சம்
உறவாடும் வேளை
தண்ணீர் கமலம் தானா

முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
என் எல்லையே

இதழோரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே

முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
என் எல்லையே

இதழோரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே

Short Notes

முகம் காட்டு நீ” என்ற பாடலானது 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “மரகத நாணயம்” என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் “ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனிஷ்காந்த்” ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் திரைக்கதையினை ARK சரவணன் எழுதி இயக்கியுள்ளார். G டில்லிபாபு படத்தினை தயாரித்துள்ளார்.

இதனை PV சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா GK மேற்கொண்டுள்ளார்.

திபு நினன் தாமஸ் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணியை இசையமைத்துள்ளார். அருண்ராஜா காமராஜ், GKB பாடல் வரிகளை இயற்றியுள்ளனர்.

பிரதீப் குமார், அருண்ராஜா காமராஜ், திபு நினன் தாமஸ், கபில், சரண்யா கோபிநாத் முதலானோர் இதன் பாடல்களை பாடியுள்ளனர்.

இது 16 ஜூன் 2017 அன்று திரையரங்குகளில் வெளியானது. மேலும் மரகத நாணயம் திரைப்படம் பற்றி அறிய Wikipedia மற்றும் IMDb.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *