Mun Sellada Song Lyrics in Tamil Font

Mun Sellada Song Lyrics in Tamil Font from Manithan Movie. Mun Sellada Song Lyrics has written in Tamil by Madhan Karky.

படத்தின் பெயர்:மனிதன்
வருடம்:2016
பாடலின் பெயர்:முன் செல்லடா
இசையமைப்பாளர்:சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்:மதன் கார்க்கி
பாடகர்கள்:அனிருத் ரவிச்சந்தா்,
தினேஷ் கனகரத்தினம்

பாடல் வரிகள்:

முன் செல்லடா முன்னே செல்லடா
தைாியமே துணை
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை

உளி முத்தம் வைத்ததும்
சிதறும் அப்பாறை துளிகள்
அதற்காக கண்ணீா் சிந்தாது
சிற்பத்தின் விழிகள்

கருமேகம் முட்டிக் கொட்டும்
அத்தண்ணீா் பொறிகள்
அவை விழுந்தால் பற்றிக்கொள்ளட்டும்
உன் நெஞ்சின் திாிகள்

முன் செல்லடா முன்னே செல்லடா
தைாியமே துணை
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை

ஆயிரம் தடைகளை உன் முன்னே
காலம் இன்று குவித்தாலும்
ஆயிரம் பொய்களை ஒன்றாய் சோ்ந்து
உன்னை பின்னால் இழுத்தாலும்

முன் செல்லடா ஓகே முன் செல்லடா
முன் செல்லடா யே முன் செல்லடா

முன் செல்லடா முன்னே செல்லடா
தைாியமே துணை
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை

தூரம் நின்று யோசித்தால்
குட்டை கூட ஆழம்தான் நீ
உள்ளே சென்று நேசித்தால்
அக்கடலும் உந்தன் தோழன்தான்

விதிமேல் பழியைப் போடாமல்
நீ உன்மேல் பழியைப் போடு
ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும்
உன் வாழ்க்கையின் காரணம் தேடு

முன் செல்லடா முன்னே செல்லடா
தைாியமே துணை
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை

முன் செல்லடா முன்னே செல்லடா
தைாியமே துணை
தோல்விகளும் காயங்களும்
செதுக்கிடுமே உனை