Oru Thuli Mazhaiyinil Song Lyrics in Tamil

Oru Thuli Mazhaiyinil Song Lyrics in Tamil from Eetti Movie. Oru Thuli Mazhaiyinil Song Lyrics has penned in Tamil by Annamalai.

படத்தின் பெயர்:ஈட்டி
வருடம்:2015
பாடலின் பெயர்:ஒரு துளி மழையினில்
இசையமைப்பாளர்:GV பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்:அண்ணாமலை
பாடகர்கள்:சித்தார்த் மகாதேவன்

பாடல் வரிகள்:

ஒரு துளி மழையினில்
தொடங்குது பெருங்கடல் தான்
உன் முதல் அடியை
நீ வைத்திட டா

தடை தடை தடை தடை
இருப்பதை தாண்டிடதான்
நீ காற்றினிலே
பாயும் ஈட்டிய டா

கடிகாரம் முள்ளை போலே
நிற்காமல் நீ ஓடு
கால் தீண்டும் தூரம் தானே
வெற்றி கொடு

ஒரு துளி மழையினில்
தொடங்குது பெருங்கடல் தான்
உன் முதல் அடியை நீ
வைத்திட டா

குறி வச்சு அடி
வெற்றி வரும்படி
உன் முத்திரையை பதி
நீ ஓயாதே

மண்ணை கீறி விதை
மேலே வரும் வரை
பூமிக்குள்ளே அது போராடும்

உழைத்திடும் வரை
உன் வலித்திடும் உடல்
வாங்கும் தங்க மெடல்
நீ கலங்காதே

உனக்கொரு எல்லை
உலகத்தில் இல்லை
கடவுளின் பிள்ளை
இங்கு நீ தானே

பாதம் பட்ட இடம் யாவும்
பாதை என்றே மாற்றிட ஓடு

தடுக்கி நீ விழு
திரும்ப நீ எழு
அதில் ஒன்றும் பிழை
இங்கு கிடையாது

ஒரு சிறு பிறை
தெரிகின்ற கரை
நிலவுக்கு குறை
அது கிடையாது

பசிக்கொண்ட புலி
மானை வைக்கும் குறி
வேட்டையாடும்போது
இரை தப்பாது

ஆகாயத்தை திற
நீ அதை தாண்டி பற
வானவில்லும் மாலை
அது உனக்காக

பாதம் பட்ட இடம் யாவும்
பாதை என்றே மாற்றிட ஓடு

ஒரு துளி மழையினில்
தொடங்குது பெருங்கடல் தான்
உன் முதல் அடியை
நீ வைத்திட டா

தடை தடை தடை தடை
இருப்பதை தாண்டிடதான்
நீ காற்றினிலே
பாயும் ஈட்டிய டா

கடிகாரம் முள்ளை போலே
நிற்காமல் நீ ஓடு
கால் தீண்டும் தூரம் தானே
வெற்றி கொடு

ஒரு துளி மழையினில்
தொடங்குது பெருங்கடல் தான்
உன் முதல் அடியை நீ
வைத்திட டா