Maruvarthai Pesathe Song Lyrics in Tamil from Enai Noki Paayum Thota Movie. Maruvarthai Pesathe Song Lyrics has penned in Tamil by Thamarai.
படத்தின் பெயர் | என்னை நோக்கிப் பாயும் தோட்டா |
---|---|
வருடம் | 2017 |
பாடலின் பெயர் | மறு வார்த்தை பேசாதே |
இசையமைப்பாளர் | டர்புக சிவா |
பாடலாசிரியர் | தாமரை |
பாடகர் | சித்ஸ்ரீராம் |
Maruvarthai Pesathe Lyrics in Tamil
மறு வார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வறுடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்டக் கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாகக் கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே…
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே…
விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்
மணி காட்டும் கடிகாரம்
தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம் மடிந்தாலும் வரும்
முதல் நீ… முடிவும் நீ…
அலர் நீ… அகிலம் நீ…
தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய்…
உயிரோடு முன்பே கலந்தாய்…
இதழ் எனும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே
கனவாகிக் கலைந்தாய்
பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம்… எழில்கோலம்
இனிமேல்… மழைக்காலம்
மறு வார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விறல் உன்னை வறுடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்டக் கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாகக் கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே…
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே…
மறு வார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு…
Short Info
“மறு வார்த்தை பேசாதே” என்கிற பாடலானது என்னை நோக்கிப் பாயும் தோட்டா என்ற தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படத்தினை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக ரகு என்ற கதாபாத்திரத்திலும் மேகா ஆகாஷ் கதாநாயகியாக லேகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
மேலும் இவர்களுடன் சுனைனா, சசிகுமார் மற்றும் ரானாராகுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்பாடலினை டர்புக சிவா இசையமைக்க சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இப்பாடலின் வரிகளை தாமரை இயற்றியுள்ளார்.
இந்த பாடலானது 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பாடலினை கெளதம் வாசுதேவ் மேனன் தனது யூடுப் வலைதளமான ஒன்றாக என்டேர்டைன்மெண்ட்-ல் வெளியிட்டார். இந்த பாடலானது இன்றைய தேதி (25 அக்டோபர் 2018) வரை 61 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.
இந்த பாடலை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் மேலும் சில பாடல்கள் வெளியிடப்பட்டன. அவைகளாவன நான் பிழைப்பேனோ, விசிறி ஆகியவை. இவைகள் யாவும் போதிய வரவேற்பை பெறவில்லை. மறு வார்த்தை பேசாதே பாடலானது மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த பாடலானது பெரும்பாலான காதலர்களின் அழைப்பாளர் இசையாக வைக்கப்பட்டது. மேலும் அறிய