High on Love Song Lyrics in Tamil from Pyaar Prema Kaadhal Movie. Jannal Oramai Munnale Song Lyric Penned in Tamil by Niranjan Bharathi.
படத்தின் பெயர் | பியார் பிரேமா காதல் |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | ஹை ஆன் லவ் |
இசையமைப்பாளர் | யுவன் சங்கர் ராஜா |
பாடலாசிரியர் | நிரஞ்சன் பாரதி |
பாடகர் | சித்ஸ்ரீராம் |
High on Love Lyrics in Tamil
ஏ… பெண்ணே…
என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிறாய்
நீ… அருகில்…
புரியாத மாயம் செய்கிறாய்
உன்னை போலவே நான் இங்கே
மயங்கி கிரங்கித்தான் போனேனே
போதையாகத்தான் ஆனேனே
தள்ளாடும் ஜீவனே…
ஜன்னல் ஓரமாய் முன்னாலே
மின்னல் போலவே வந்தாயே…
விண்ணை தாண்டி ஓர் சொர்க்கத்தை
மண்ணில் எங்குமே தந்தாயே…
விழியே நீங்கி நீ விலகாதே
நொடியில் என் மனம் தாங்காதே…
என்ன நேருமோ தெரியாதே
என் ஜீவன் ஏங்குதே…
என் உயிரினை வதைத்திடும் அழகி நீ
என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ
என் உடலினுள் நதியாய் ஓடும்
உதிரம் நீயடி
உன் சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே
உன் மொழிகளில் இசைகளும் தோற்குதே
உன் இரு விழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே
உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன்
வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா?
இருந்தும் உன் இதழ்கள்
அந்த வார்த்தை சொல்லுமா?
குருவி போலவே என்னுள்ளம்
தத்தி தாவுதே உன்னாலே…
குழந்தை போலவே என் கால்கள்
சுற்றி திரியுதே பின்னாலே…
தீயை போலவே என் தேகம்
பற்றி எரியுதே தன்னாலே…
அருவி போலவே ஆனந்தம்
நில்லாமல் பாயுதே…
ஏ… பெண்ணே…
என் நெஞ்சில் சாய்ந்து சாய்கிறாய்
நீ… அருகில்…
புரியாத மாயம் செய்கிறாய்
Oneline Story
கதாநாயகனும் கதாநாயகியும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். அவர்கள் இருவரும் இரவு விருந்தினர் கூட்டத்திற்கு சென்றுள்ளனர். அப்போது கதாநாயகி குடி போதையில் கதாநாயகனிடம் அவள் விருப்பத்தை சொல்லும் போது அவள் மயக்கமுறும் தருணத்தில் இப்பாடல் இடம் பெறுகிறது.
Short Info
ஹை ஆன் லவ் என்கிற பாடலானது பியார் பிரேமா காதல் என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தினை எலன் இயக்கியுள்ளார். இப்பாடலின் வரிகளை நிரஞ்சன் பாரதி இயற்றியுள்ளார். இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சித்ஸ்ரீராம் பின்னணி பாடியுள்ளார்.
இந்த திரைப்படத்தினை யுவன் சங்கர் ராஜா மற்றும் எஸ் என் ராஜராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும் ரைசா வில்சன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இந்த படமானது 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. இந்த பாடலே இப்படத்தின் முதல் பாடலாகும். இப்பாடல் யூடுப் வலைத்தளத்தில் இன்றுவரை (26 அக்டோபர் 2018) 18 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் அறிய