Margali Poove Song Lyrics in Tamil

Margali Poove Song Lyrics in Tamil May Madham Movie. Margali Poove Song Lyrics has penned in Tamil by Vairamuthu. Margali Poove Tamil Lyrics

படத்தின் பெயர்:மே மாதம்
வருடம்:1994
பாடலின் பெயர்:மார்கழி பூவே
இசையமைப்பாளர்:AR ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:சோபனா சேகர்

பாடல் வரிகள்:

மார்கழி பூவே
மார்கழி பூவே
உன் மடி மேலே
ஓர் இடம் வேண்டும்

மார்கழி பூவே
மார்கழி பூவே
உன் மடி மேலே
ஓர் இடம் வேண்டும்

மெத்தை மேல் கண்கள்
மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால்
கனவுகள் கொள்ளை

மெத்தை மேல் கண்கள்
மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால்
கனவுகள் கொள்ளை

மார்கழி பூவே
மார்கழி பூவே
உன் மடி மேலே
ஓர் இடம் வேண்டும்

பூக்களைப் பிரித்து
புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால்
முயல் போல் குதிப்பேன்

நான் மட்டும் இரவில்
தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில்
தேநீர் குடிப்பேன்

வாழ்கையின் ஒரு பாதி
நான் எங்கு வசிப்பேன்
வாழ்கையின் மறு பாதி
நான் என்றும் ரசிப்பேன்

காற்றில் வரும் மேகம் போலே
நான் எங்கும் மிதப்பேன்

மார்கழி பூவே
மார்கழி பூவே
உன் மடி மேலே
ஓர் இடம் வேண்டும்

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்

காவிரி மணலில்
நடந்ததுமில்லை
கடற்கரை அலையில்
கால் வைத்ததில்லை

சுதந்திர வானில்
பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில்
நனைந்ததும் இல்லை

சாலையில் நானாகப்
போனதுமில்லை
சமயத்தில் ஆணாக
ஆனதுமில்லை

ஏழை மனம் காணும் இன்பம்
நான் காணவில்லை

மார்கழி பூவே
மார்கழி பூவே
உன் மடி மேலே
ஓர் இடம் வேண்டும்

மார்கழி பூவே
மார்கழி பூவே
உன் மடி மேலே
ஓர் இடம் வேண்டும்

மெத்தை மேல் கண்கள்
மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால்
கனவுகள் கொள்ளை

மெத்தை மேல் கண்கள்
மூடவும் இல்லை
உன்மடி சேர்ந்தால்
கனவுகள் கொள்ளை

மார்கழி பூவே
மார்கழி பூவே
உன் மடி மேலே
ஓர் இடம் வேண்டும்

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்

வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *