Karpura Nayagiye Song Lyrics in Tamil

Karpura Nayagiye Song Lyrics in Tamil from Amman Songs. Karpoora Nayagiye or Karpura Nayagiye Kanakavalli Song Lyrics has sung by LR Eswari.

Karpoora Nayagiye Lyrics in Tamil

லிங்கேஸ்வர பூஜித்த வாகினி
சுசீந்திர சர்வ மதான்கினி
கலபகஸ்தூரி சுகந்த சுந்தரி
சர்வஜன சங்கரி சர்வேஸ்வரி
சர்வஜன சங்கரி சர்வேஸ்வரி

கற்பூர நாயகியே கனகவள்ளி
கற்பூர நாயகியே கனகவள்ளி
காளி மகமாயி கருமாரி அம்மா
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா ஆ…

கற்பூர நாயகியே கனகவள்ளி
காளி மகமாயி கருமாரி அம்மா

விற்கால வேதவள்ளி விசாலாட்சி
விழிக்கோல மாமதுரை மீனாட்சி
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே
சுடராக வாழ்விப்பாய் எம்மை நீயே

கற்பூர நாயகியே கனகவள்ளி
காளி மகமாயி கருமாரி அம்மா

புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி
நவநவமாய் வடிவாகும் மகேஸ்வரி
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி

கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி
உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி
உன்னடிமைச் சிறியவளை நீ ஆதரி

கற்பூர நாயகியே கனகவள்ளி
காளி மகமாயி கருமாரி அம்மா

நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழிய வேண்டும்
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்
கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும்

சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா
உன் மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா

அம்மா கற்பூர நாயகியே கனகவள்ளி
காளி மகமாயி கருமாரி அம்மா

காற்றாகி கனவாகிக் கடலாகினாய்
கயிறாகி உயிராகி உடலாகினாய்
காற்றாகி கனவாகிக் கடலாகினாய்
கயிறாகி உயிராகி உடலாகினாய்

நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகி பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்

தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை
போற்றாத நாளில்லை தாயே உன்னை
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை
நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை

செம்பவள வாயழகி உன்னெழிலோ
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை
அம்பளவு விழியாலே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை

அன்புக்கே நானடிமையாக வேண்டும்
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்

பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்
என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்

கற்பூர நாயகியே கனகவள்ளி
காளி மகமாயி கருமாரி அம்மா
கற்பூர நாயகியே கனகவள்ளி
காளி மகமாயி கருமாரி அம்மா
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா ஆ…

கற்பூர நாயகியே கனகவள்ளி
காளி மகமாயி கருமாரி அம்மா
காளி மகமாயி கருமாரி அம்மா
காளி மகமாயி கருமாரி அம்மா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *