Kannu Thangam Rasathi Song Lyrics

Kannu Thangam Rasathi Song Lyrics in Tamil from Vaanam Kottattum Movie. Kannu Thangam Rasathi Song Lyrics has penned in Tamil by Siva Anandh.

படத்தின் பெயர்வானம் கொட்டட்டும்
வருடம்2020
பாடலின் பெயர்கண்ணு தங்கோம் ராசாத்தி
இசையமைப்பாளர்சித் ஸ்ரீராம்
பாடலாசிரியர்சிவா ஆனந்த்
பாடகர்கள்சித் ஸ்ரீராம்,
சக்திஸ்ரீ கோபாலன்
பாடல் வரிகள்:

ஆண்: கண்ணு தங்கோம் ராசாத்தி
உன்னை கண்டாலே
நெஞ்சு முச்சூடும் தீவாளி

ஆண்: சொன்னா நம்பு மவராசி
உன் பேர் சொல்லாட்டி
மழை ஊருக்கு பெய்யாதடி

ஆண்: அழகி உன் புன்னகை
அரை டஜன் பௌர்ணமி
ஆசையா பேசுடி
மனசுல மார்கழி

ஆண்: ராணி காளி எசமானி
பார்வை பார்த்தாலே
மாமன் உள்ளார பூமாரி

ஆண்: லேசா மொறைச்சாலே
மூச்சு தடுமாறி
நாடி நரம்பெல்லாம் முக்காடுதே

ஆண்: உனக்கும் மேல ஊருல
எனக்குனு யாரடி
அடிச்சு நான் சொல்லுவேன்
உனக்கு நான் காலணி

குழு: ராசாத்தி ராசாத்தி
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
மவராசி மவராசி

குழு: ராசாத்தி ராசாத்தி
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
மவராசி மவராசி

பெண்: ராசா சிங்கம் என் சாமி
யாரு சொன்னாலும்
எனக்கு நீதானே சரிபாதி

பெண்: வாயா பாவி காத்திருக்கேன்
போனா போவட்டும்
என்னை கை கோர்த்து
கரை சேரய்யா

பெண்: தனியில நடக்கையில்
எனக்கு நீ தொனையிரு
மடியில மனசுல
உறங்கிட எடங்கொடு

ஆண்: கண்ணு தங்கோம் ராசாத்தி
ஓ… ஓ… ஹோ ஹோ ஹோ ஓஒ…
கண்ணு தங்கோம் ராசாத்தி
ஹ்ம்ம்… ம்ம்ம்ம்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *