Kaattu Sirukki Song Lyrics in Tamil

Kaattu Sirukki Song Lyrics in Tamil from Raavanan Movie. Kaattu Sirukki Song Lyrics has penned in Tamil by Vairamuthu and music by AR Rahman.

பாடல்:காட்டுச் சிறுக்கி
படம்:ராவணன்
வருடம்:2010
இசை:AR ரஹ்மான்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:சங்கர் மகாதேவன்,
அனுராதா ஸ்ரீராம்

Kaattu Sirukki Lyrics in Tamil

பெண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

ஆண்: ஓ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

பெண்: ஈக்கி மின்னல் அடிக்குதடி
ஆண்: யாத்தே
பெண்: ஈர கொலக் துடிக்குதடி
ஆண்: யாத்தே

பெண்: ஈக்கி மின்னல் அடிக்குதடி
ஆண்: யாத்தே
பெண்: ஈர கொலக் துடிக்குதடி
ஆண்: யாத்தே

ஆண்: நச்சு மனம் மச்சினியோடு
மச்சினியோடு மருகுதடி
அவ நெத்தியுல வச்ச பொட்டுல
என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே
அவ நெத்தியுல வச்ச பொட்டுல
என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே
அவ பார்வையில் எலும்புக
பல்பொடி ஆச்சே

பெண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

ஆண்: யாரோ எவளோ
யாரோ எவளோ
யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

பெண்: தண்டை அணிஞ்சவ
கொண்டை அரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு
ஆண்: வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு

பெண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

ஆண்: உச்சந்தலை வகிடு வழி
ஒத்த மனம் அலையுதடி
ஒதட்டு வரி பள்ளத்துல
உசிர் விழுந்து தவிக்குதடி

ஆண்: பாழாப் போன மனசு
பசியெடுத்து
கொண்ட பத்தியத்த முறிக்குதடி
பாராங்கல்ல சொமந்து
வழி மறந்து
ஒரு நத்தக்குட்டி நகருதடி

ஆண்: கொண்டக் காலு
செவப்பும் மூக்கு வனப்பும்
என்னக் கிறுக்குன்னு சிரிக்குதடி

ஆண்: ஓ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

ஆண்: யாரோ எவளோ
யாரோ எவளோ
யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

பெண்: தண்டை அணிஞ்சவ
கொண்டை அரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு
ஆண்: வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு

ஆண்: ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சு போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு

ஆண்: ஊரான் காட்டு கனியே
உன்ன நெனச்சு நெஞ்சு
சப்புக்கொட்டித் துடிக்குதடி
யாத்தே இது சரியா இல்ல தவறா
நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி

ஆண்: உன்ன முன்ன நிறுத்தி
என்ன நடத்தி
கெட்ட விதி வந்து சிரிக்குதடி

பெண்: ஓ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
ஆண்: ஓ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

பெண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ

ஆண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

பெண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ

பெண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ

1 thought on “Kaattu Sirukki Song Lyrics in Tamil”

  1. தண்டை அணிஞ்சவ
    கொண்டை அரிஞ்சதும்
    அண்டசராசரம் போச்சு.

    1. தண்டை என்பது சரியா அல்லது கண்ட என்பது சரியா…
    கண்டு என்பதற்கு “ஒரு குச்சி அல்லது குழல் மீது உருளையாக சீராக சுற்றிவைக்கப்பட்ட நூல், கயிறு, நாடா போன்றவை” என்று ஒரு பொருள் உண்டு.

    2. அரிஞ்சதும் என்பது சரியா சரிஞ்சதும் என்பது சரியா….

    தண்டை அணிஞ்சவ
    கொண்டை அரிஞ்சதும்
    அண்டசராசரம் போச்சு.
    என்பது
    கண்ட அணிஞ்சவ
    கொண்டை சரிஞ்சதும்
    அண்டசராசரம் போச்சு.
    அதாவது குழலை (கூந்தலை) இறுக்கி வைக்கப்பட்டுள்ள நூலை அணிந்தவளின் கொண்டை அதாவது கூந்தல் சரிந்ததும் அந்தசராசரம் வரை அந்த கூந்தல் விரிந்தது என்று பொருள் கொள்ளலாம்.
    இதில் எது சரியானது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *