Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Easy Come Easy Go Song Lyrics in Tamil

Easy Come Easy Go Song Lyrics in Tamil from Vaanam Kottattum Movie. Easy Come Easy Go Song Lyrics has penned in Tamil by Siva Anandh.

படத்தின் பெயர்வானம் கொட்டட்டும்
வருடம்2020
பாடலின் பெயர்ஈசி கம் ஈசி கோ
இசையமைப்பாளர்சித் ஸ்ரீராம்
பாடலாசிரியர்சிவா ஆனந்த்
பாடகர்கள்சித் ஸ்ரீராம், சஞ்சீவ்,
தபஸ் நரேஷ்
பாடல் வரிகள்:

ஆண்: செவ்விழி வெண்கடல்
மின்மின்னும் வானவில்
பொன்னொளி ஓ பால்வெளி
எல்லாம் உள்ளங்கையிலே

ஆண்: இந்திரன் சூரியன்
துள்ளிடும் தாரகை
மண்ணிலே ஓ பூ மழை
எல்லாம் மங்கை நெஞ்சிலே ஹேய்

ஆண்: கை பிடித்து நாம் நடக்க
ஊர் உலகம் ஒதுங்கிடும் வா வா வா
வீசி வரும் பேரலையும்
பதுங்கி நின்னு தழுவிடும் வா வா வா

ஆண்: ஹேய் ஏய்
கனவுக்கு விலையென்ன சொல்
காட்டு புலி மனம் எட்டு திசையிலும்
தத்தி தாவி போகும்
தூரம் என்ன கேட்டு சொல்

ஆண்: பூத்திடும் பாதை எல்லாம்
புத்தி சித்தி மட்டும் ஒட்டிகூட வர
கட்டி போட்டு வைக்க யாருமில்ல ஓ…
எட்டி தள்ளி போடு கவலைகள ஓ…

குழு: ஈசி கம் ஈசி கோ
என்ன வேணும் கேட்டுக்கோ
ஈசி கம் ஈசி கோ
இஷ்ட பட்டா வச்சிக்கோ

குழு: ஈசி கம் ஈசி கோ
என்ன வேணும் கேட்டுக்கோ
ஈசி கம் ஈசி கோ
இஷ்டம் போல பாடிக்கோ

ஆண்: செவ்விழி வெண்கடல்
மின்மின்னும் வானவில்
பொன்னொளி ஓ பால்வெளி
எல்லாம் உள்ளங்கையிலே

ஆண்: சின்னதாய் ஆசைகள்
தேவைகள் ஓ என்னிலே
உண்மையாய் நான் சொல்கிறேன்
நான் என்னை கண்டேன் விண்ணிலே

ஆண்: ஓடும் மேகமெல்லாம்
நம் பேர் சொல்லி கூவாதோ
இனி என்றும் எப்போதும்
பொற்காலம் வா வா வா

குழு: ஈசி கம் ஈசி கோ
என்ன வேணும் கேட்டுக்கோ
ஈசி கம் ஈசி கோ
இஷ்ட பட்டா வச்சிக்கோ

குழு: ஈசி கம் ஈசி கோ
என்ன வேணும் கேட்டுக்கோ
ஈசி கம் ஈசி கோ
இஷ்ட பட்டா வச்சிக்கோ

குழு: ஈசி கம் ஈசி கோ
என்ன வேணும் கேட்டுக்கோ
ஈசி கம் ஈசி கோ
இஷ்டம் போல பாடிக்கோ


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.