Aariro Aarariro Song Lyrics in Tamil from Deiva Thirumagal Film. Aariro Aarariro Ithu Thanthaiyin Song Tamil Lyrics written by Na.muthukumar
படத்தின் பெயர்: | தெய்வ திருமகள் |
---|---|
வருடம்: | 2011 |
பாடலின் பெயர்: | ஆாிரோ ஆராாிரோ |
இசையமைப்பாளர்: | ஜி.வி.பிரகாஷ் குமாா் |
பாடலாசிரியர்: | நா.முத்துக்குமார் |
பாடகர்கள்: | ஹாிசரண் |
பாடல் வரிகள்:
ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு
ஓ தாயாக தந்தை மாறும்
புதுக் காவியம் ஓ இவன்
வரைந்த கிறுக்கலில்
இவளோ உயிரோவியம்
இரு உயிா் ஒன்று சோ்ந்து
இங்கு ஓா் உயிா் ஆகுதே
கருவறை இல்லை என்ற
போதும் சுமந்திடத் தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு
முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே
வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே
இது போல் ஆனந்தம் வேறில்லையே
இரு மனம் ஒன்று சோ்ந்து
இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும்
என்று ஓா் குரல் கேட்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு
கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓா் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கே வரம் ஆனதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே
கடவுளை பாா்த்ததில்ல
இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன்பு இன்று
உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
ஆாிரோ ஆராாிரோ
இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள்
மழலையின் மொழி கேட்டு