Un Vizhigalil Vizhuntha Naan Song Lyrics in Tamil from Darling Movie. Un Vizhigalil Vizhuntha Naan Song Lyrics has penned by Na.Muthukumar.
படத்தின் பெயர்: | டார்லிங் |
---|---|
வருடம்: | 2015 |
பாடலின் பெயர்: | உன் விழிகளில் |
இசையமைப்பாளர்: | GV பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | நா.முத்துக்குமார் |
பாடகர்கள்: | ஹரிணி |
Un Vizhigalil Vizhuntha Naan Lyrics
உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன்
மறுபடி விழுகிறேன்
உன் பாா்வையில்
தோன்றிட அலைகிறேன்
அலைந்தும் ஏன்
மறுபடி தொலைகிறேன்
ஓா் நொடியும் உன்னை நான் பிாிந்தால்
போா்களத்தை உணா்வேன் உயிாில்
என் ஆசை எல்லாம் சோ்த்து
ஓா் கடிதம் வரைகிறேன் அன்பே
உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன்
மறுபடி விழுகிறேன்
தூரத்தில் தோன்றிடும்
மேகத்தை போலவே
நான் உன்னை பாா்க்கிறேன் அன்பே
சாரலாய் ஓா் முறை
நீ என்னை தீண்டினாய்
உனக்கது தொிந்ததா அன்பே
என் மனம் கானலின்
நீரென ஆகுமா
கைகளில் சேருமா அன்பே
நேசிக்கும் காலம் தான்
வீணெண போகுமா
நினைவுகள் சோ்க்கிறேன் இங்கே
ஆயினும் காதலின் கைகளில்
விரும்பியே விழுகிறேன் அன்பே
பூக்களில் தோன்றிடும்
வண்ணங்கள் போலவே
பெண்களின் நெஞ்சம் தானடா
வண்ணத்துப் பூச்சியின்
வண்ணங்கள் போலவே
ஆண்களின் நெஞ்சம் தானடா
வண்ணங்கள் வேறென
தோன்றிடும் போதிலும்
எண்ணங்கள் சேருமா அன்பே
வண்ணத்து பூச்சியின்
சிறகுகள் மோதவே
இதழ்களும் உள்ளதே இங்கே
ஆயினும் காதலின் கைகளில்
விரும்பியே விழுகிறேன் அன்பே
உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன்
மறுபடி விழுகிறேன்