Thandiya Attam Ada Song Lyrics in Tamil

Thandiya Attam Ada Song Lyrics in Tamil from Kadhalar Dhinam Movie. Dandiya Aatamum Aada or Thandiya Attam Ada Song Lyrics penned by Vaali.

பாடல்:தாண்டியா ஆட்டமும் ஆட
படம்:காதலர் தினம்
வருடம்:1999
இசை:AR ரஹ்மான்
வரிகள்:வாலி
பாடகர்:உன்னி மேனன், MG ஸ்ரீகுமார்,
கவிதா கிருஷ்ணமூர்த்தி

Thandiya Attam Ada Lyrics in Tamil

ஆண்: தாண்டியா ஆட்டமும் ஆட
தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட
காதலன் காதலிய தேட

ஆண்: அவள் தென்படுவாளோ
எந்தன் கண் மறைவாக
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு

ஆண்கள்: அவள் எங்கே என
காணாமல் வாட
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ

ஆண்: தாண்டியா ஆட்டமும் ஆட
தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட
காதலன் காதலிய தேட

ஆண்: உன்னைக்கண்டு
எண்ணம் யாவும் மெல்ல
ஊமையாகி நின்றதென்ன சொல்ல
நூறு வார்த்தை அல்ல அல்ல
ஒரு வார்த்தை புரியாதா

பெண்: எந்த வார்த்தை
சொல்லவில்லையோ நீ
அந்த வார்த்தை
எந்தன் கண்களால் நான்
நூறு ஜாடையில் சொன்னேனே
தெரியாதா புரியாதா

ஆண்: ஓ மையைப்போல நானும்
கண்ணில் சேர வேண்டும்
மையைப்போல நானும்
கண்ணில் சேர வேண்டும்
பூவைப்போல நானும் உந்தன்
கூந்தல் சேர வேண்டும்

பெண்: ஓ கண்ணில் வைத்த மையும்
கரைந்து போகக்கூடும்
கூந்தல் வைத்த வண்ணப் பூவும்
வாடிப் போகக்கூடும்

ஆண்: சிறு காதல் நெஞ்சை
நான் தரலாமா
உன் கணவனாக
நான் வரலாமா

பெண்: இந்த வார்த்தை
மட்டுமே நிஜமானால்
ஒரு ஜென்மம் போதும்

ஆண்: உயிரே வா
பெண்: அன்பே வா
ஆண்: உயிரே வா
பெண்: அன்பே வா

ஆண்: தாண்டியா ஆட்டமும் ஆட
தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட
காதலன் காதலிய தேட

ஆண்: அவள் தென்படுவாளோ
எந்தன் கண் மறைவாக
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு

ஆண்கள்: அவள் எங்கே என
காணாமல் வாட
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ

பெண்: காதல் பார்வைகள்
எல்லாமே அழகு
காதல் வார்த்தைகள்
எல்லாமே கவிதை
காதல் செய்வதே எந்நாளும்
தெய்வீகம் தெய்வீகம்

ஆண்: காதல் என்பதைக்
கண்டு பிடித்தவன்
காலம் முழுவதும்
நன்றிக்குரியவன்
காதல் இல்லையேல் என்னாகும்
பூலோகம் பூலோகம்

பெண்: ஓ உள்ளம் என்ற ஒன்றை
உன்னிடத்தில் தந்தேன்
தந்த உள்ளம் பத்திரமா
தெரிந்துகொள்ள வந்தேன்

ஆண்: ஓ என்னைப் பற்றி நீதான்
எண்ணியது தவறு
என்னைவிட உந்தன் உள்ளம்
என்னுடைய உயிரு

பெண்: இரு உயிர்கள்
என்பதே கிடையாது
இதில் உனது எனது
எனப் பிரிவேது

ஆண்: இந்த வார்த்தை
மட்டுமே நிஜமானால்
ஒரு ஜென்மம் போதும்

பெண்: உயிரே வா
ஆண்: அன்பே வா
பெண்: உயிரே வா
ஆண்: அன்பே வா

ஆண்கள்: வாலிப நெஞ்சங்கள்
உறவு கொண்டாட
வந்தது இங்கொரு ராத்திரி
தாண்டியா என்றொரு ராத்திரி

ஆண்கள்: வாலிப நெஞ்சங்கள்
உறவு கொண்டாட
வந்தது இங்கொரு ராத்திரி
தாண்டியா என்றொரு ராத்திரி

பெண்கள்: துணை செய்ய
நாங்கள் உண்டு தோழரே
துணிந்து நீ
காதல் செய்வாய் தோழியே

குழு: உங்களாலே என்றும் மண்ணில்
காதல் வாழுமே
உங்களாலே என்றும் மண்ணில்
காதல் வாழுமே

குழு: உங்களாலே என்றும் மண்ணில்
காதல் வாழுமே
உங்களாலே என்றும் மண்ணில்
காதல் வாழுமே

பெண்: ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஓஹோ
ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஓஹோ

பெண்: ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ ஹோ

குழு: உங்களாலே என்றும் மண்ணில்
காதல் வாழுமே
உங்களாலே என்றும் மண்ணில்
காதல் வாழுமே

குழு: உங்களாலே என்றும் மண்ணில்
காதல் வாழுமே
உங்களாலே என்றும் மண்ணில்
காதல் வாழுமே

பெண்: ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ ஹோ ஹோ

பெண்: ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஓஹோ
ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஓஹோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *