Pookale Satru Oyivedungal Song Lyrics

Pookale Satru Oyivedungal Song Lyrics in Tamil from I Movie. Pookale Satru Oyivedungal Song Lyrics has penned in Tamil by Madhan Karky.

படத்தின் பெயர்
வருடம்2015
பாடலின் பெயர்பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்மதன் கார்க்கி
பாடகர்கள்ஹரிசரண், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரிகள்:

ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

ஆண்: ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா

ஆண்: ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

பெண்: இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை
உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
விழி அழகு கடந்து உன் இதயம் நுழைந்து
என் ஐம்புலம் உணர்ந்திடும் ஐ

ஆண்: இவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க
அவள் செய்கையில் பெய்வது ஐ
அவள் விழியின் கனிவில் இந்த உலகம் பணியும்
சிறு நோய்யளவும் ஐயமில்லை

பெண்: என் கைகளை கோர்த்திடு ஐ விரலை
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை

ஆண்: அவள் இதழ்களை நுகர்ந்துவிட
பாதை நெடுக
பெண்: தவம் புரியும்

ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

ஆண்: ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா

ஆண்: ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

பெண்: நீர்வீழ்ச்சி போலே நின்றவன்
நான் நீந்த ஒரு ஓடை ஆனான்
வான் முட்டும் மலையை போன்றவன்
நான் ஆட ஒரு மேடை ஆனான்

ஆண்: என்னுள்ளே என்னை கண்டவள்
யாரென்று எனை காணச்செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்தவள்
சிற்பம் செய்து கையில் தந்தாள்

பெண்: யுகம் யுகம் காண முகம் இது போதும்
புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்

ஆண்: மறு உயிர் தந்தாள் நிமிர்ந்திடச் செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே

ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

ஆண்: ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா

பெண்: ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால்
அந்த ஐகளின் ஐ அவன் நீயா

ஆண்: ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *