Kala Kalavena Pozhiyum Song Lyrics in Tamil from Rhythm Movie. Kala Kalavena Pozhiyum Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | ரிதம் |
---|---|
வருடம்: | 2000 |
பாடலின் பெயர்: | கலகலவெனப் பொழியும் |
இசையமைப்பாளர்: | AR ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | சாதனா சர்கம் |
பாடல் வரிகள்
அன்பே இது நிஜம்தானா
என் வானில் புது விண்மீனா
யாரைக் கேட்டது இதயம்
உன்னைத் தொடர்ந்து போக
என்ன துணிச்சல் அதற்கு
என்னை மறந்து போக
இருந்தும் அவை இனிய வலிகளே
கலகலவெனப் பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை
உளவு பார்க்க செல்லுதோ
கலகலவெனப் பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை
உளவு பார்க்க செல்லுதோ
விரல் தொடவில்லையே
நகம் படவில்லையே
விரல் தொடவில்லையே
நகம் படவில்லையே
உடல் தடையில்லையே
இது போல் ஒரு இணையில்லையே
கலகலவெனப் பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை
உளவு பார்க்க செல்லுதோ
விழியும் விழியும் கலந்து கலந்து
பார்வை ஒன்று ஆனதே
உயிரும் உயிரும் கலந்த போது
உலகம் நின்று போனதே
விழியும் விழியும் கலந்து கலந்து
பார்வை ஒன்று ஆனதே
உயிரும் உயிரும் கலந்த போது
உலகம் நின்று போனதே ஆ…
கலகலவெனப் பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை
உளவு பார்க்க செல்லுதோ
அழைக்கும்போது உதிக்க முடிந்தால்
அதற்குப் பெயரும் நிலவில்லை
நினைக்கும்போது நிலவு உதிக்கும்
நிலவு அழைக்கக் குரலில்லை
அழைக்கும்போது உதிக்க முடிந்தால்
அதற்குப் பெயரும் நிலவில்லை
நினைக்கும்போது நிலவு உதிக்கும்
நிலவு அழைக்கக் குரலில்லை
யாரைக் கேட்டது இதயம்
யாரைக் கேட்டது இதயம் ஆ…
விழி தொடுவது விரல் தொடவில்லை
கலகலவெனப் பொழியும் பொழியும்
மேகம் எங்கு செல்லுதோ
ஒளியில்லாமல் மலரும் மலரை
உளவு பார்க்க செல்லுதோ