Kadhale Kadhale Song Lyrics in Tamil

Kadhale Kadhale Song Lyrics in Tamil from 96 Movie. Kadhale Kadhale Thani Perum Song Lyrics has written in Tamil by Karthik Netha.

படத்தின் பெயர்96
வருடம்2018
பாடலின் பெயர்காதலே காதலே
நடிகர்கள்:விஜய் சேதுபதி, திரிஷா கிருஷ்ணன்,
ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷான்
இசையமைப்பாளர்கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர்கார்த்திக் நேத்தா
பாடகர்கோவிந்த் வசந்தா, சின்மயி
பாடல் வரிகள்:

ஆ கொஞ்சும் பூரணமே வா

நீ கொஞ்சும் எழிளிசையே
பஞ்சவர்ண பூதம்

நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி

காதலே காதலே
தனி பெருந்துணையே
கூடவா கூடவா
போதும் போதும்

காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போகவா
நீ….

Lyrics in English:

Aaa Konjum Pooranamae Vaa
Nee Konjum Ezhlisaiyae

Panjavarna Boodham
Nenjam Niraiyuthae
Kaanbathellaam Kaadhaladi

Kaadhalae Kaadhalae
Thani Perunthunaiyae
Kooda Vaa Kooda Vaa
Pothum Pothum

Kaadhalae Kaadhalae
Vaazhvin Neelam
Pogalaam Poga Vaa
Nee…

பாடலின் கரு:

கதாநாயகன் கதாநாயகி இருவரும் பள்ளிப் பருவத்தில் பத்தாம் வகுப்பில் காதலிக்கின்றனர். 10-ம் வகுப்பு முடிந்தவுடன் சூழ்நிலை காரணமாக பிரிக்கின்றனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு கதாநாயகன் கதாநாயகியை தேடி அவள் பயிலும் கல்லூரிக்கு செல்கிறான்.

அப்போது கதாநாயகி கதாநாயகனை கட்டி தழுவி தன் காதலை வெளிப்படுத்திகிறாள். இந்நிகழ்வுகள் யாவும் பாடலில் இடம் பெறுகின்றன. இப்பாடலில் இடம் பெறும் நிகழ்வுகள் அனைத்தையையும் கற்பனையாக கதாநாயகி கதாநாயகனின் மாணவியிடம் கூறுகிறாள்.

பாடலின் விவரங்கள்:

காதலே காதலே என்னும் படலானது 96 என்கிற படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலானது 2018-ம் ஆண்டு திங்க் மியூசிக் இந்தியா என்னும் யூடுப் பக்கத்தில் வெளியிடப்பட்டது. வெளியான முதலே இப்பாடல் பெரும்பாலான காதலர்களின் மனதை வென்றது. இந்த பாடலுக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்பாடலின் வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். இப்பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வசந்தா இணைத்து பாடியுள்ளனர்.

படத்தின் விவரங்கள்:

96 என்கிற படத்தினை பிரேம் குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி ராம் என்ற கதாபாத்திரத்திலும், திரிஷா கிருஷ்னன் ஜானு என்ற கதாபாத்திரத்திலும், ஆதித்யா பாஸ்கர் இளமையான ராம் கதாபாத்திரத்திலும், கௌரி கிஷான் இளமையான ஜானு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தில் பாடகி சின்மயி நடிகை ஜானு என்னும் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.

இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகன் கதாநாயகி இருவரும் 22 வருடங்களுக்கு பிறகு சந்தித்து தமது காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதுவரை தமிழ் திரையுலகில் வெளியிடப்பட்ட காதல் திரைப்படங்களில் இது அழிக்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. மேலும் அறிக

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *