Kangal Rendum Pesuthey Song Lyrics in Tamil Font. Kangal Rendum Pesuthey Album Song Lyrics has written in Tamil by Dayan Shan.
பாடலின் பெயர் | கண்கள் ரெண்டும் பேசுதே |
---|---|
வருடம் | 2014 |
இசையமைப்பாளர் | கௌசிகான் சிவலிங்கம் |
பாடலாசிரியர் | தயான் ஷான் |
பாடகர் | நிரஞ்சன் செகசோதி, திவாகர் |
பாடல் வரிகள்:
கண்கள் ரெண்டும் பேசுதே
உள்ளம் உன்வாசம் ஆனதே
என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்
கள்ளம் இல்லா பெண் அவள்
கருங்கூந்தல் வாசனை ஆயிரமே
கண்ணுக்குள் காண்பவை வைரமே
ஒ… ஒ.. ஓ…
சொர்கள் யாவும் மின்னுமே
நதியின் அழகைப் போலவே
மனதை கேட்டாய் வசதி கேட்டாய்
நேரத்தை கூட நீ கேட்டாய்
எடுத்து தந்தேன் முழுதும் தந்தேன்
உயிரைக் கூட நான் தந்தேன்
ஏனோ ஏனோ ஏனோ இருவிழிகளில்
காதலை புதைத்தாய்
மீண்டும் மீண்டும் மீண்டும் அதை மறைத்தேன்
பொய்களை அளித்தாய்
என்னை விட இன்னொருவன் கூட நீ
ஒ… ஒ…
கண்கள் ரெண்டும் பேசுதே
உள்ளம் உன்வாசம் ஆனதே
என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்
கள்ளம் இல்லா பெண் அவள்
கருங்கூந்தல் வாசனை ஆயிரமே
கண்ணுக்குள் காண்பவை வைரமே
ஒ… ஒ… ஓ…
சொர்கள் யாவும் மின்னுமே
நதியின் அழகைப் போலவே
அவளை எண்ணி முழுதும் நம்பி
தினமும் துடிக்கிறேன் வெம்பி
தெரிந்து கொண்டேன் புரிந்து கொண்டேன்
அவளின் இருமுகம் கண்டேன்
உண்மை உண்மை உண்மை வெளிவரவே
காத்திருந்தேன் அடடா
என்னை என்னை என்னை அவள் மறக்கும்
நேரம் தோன்றும் அடடா
கண்ணீர்களும் ஏமாற்றமும் தங்கிட நான்
ஒ… ஒ…
கண்கள் ரெண்டாய் பேசுதே
உள்ளம் தன்வழி போனதே
ஏன் இந்த காதலின் வலியை தந்தவள்
கள்ளம் உள்ள பெண் அவள்
கருங்கூந்தல் வீசி சென்றவளே
கண்ணுக்குள் காண்பது மின்னலே
ஒ… ஒ.. ஓ…
சொர்கள் யாவும் பொய்களே
நதியின் கரைகள் போலவே
கண்கள் ரெண்டாய் பேசுதே
உள்ளம் தன்வழி போனதே
ஏன் இந்த காதலின் வலியை தந்தவள்
கள்ளம் உள்ள பெண் அவள்
கருங்கூந்தல் வீசி சென்றவளே
கண்ணுக்குள் காண்பது மின்னலே
ஒ… ஒ.. ஓ…
சொர்கள் யாவும் பொய்களே
நதியின் கரைகள் போலவே
பாடலின் கரு:
கதாநாயகன் கதநாயகி இருவரும் காதலிக்கின்றனர். ஒரு நாள் கதாநாயகன் நண்பன் அவனின் காதலியை வேறு ஒரு இடத்தில் மற்றொருவனுடன் காண்கிறான். அதனை அவன் நண்பனிடம் தெரிவிக்கிறான். கதாநாயகன் இதனை அவளின் காதலனிடம் கூறி இருவரும் அவளை தேடி செல்கின்றனர். இந்நிலையில் கதாநாயகி மூன்றாம் நபராக மற்றொருவை காதலிக்கிறாள். இதனை கண்டு அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிகழ்வுகள் யாவும் இப்பாடலில் இடம்பெறுகின்றன. இந்த பாடலைப் பார்க்க.