Kadhal Oru Aagayam Song Lyrics in Tamil from Imaikkaa Nodigal Movie. Kadhal Oru Aagayam Song Lyrics was penned in Tamil by Mohanrajan.
படத்தின் பெயர் | இமைக்கா நொடிகள் |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | காதல் ஒரு ஆகாயம் |
இசையமைப்பாளர் | ஹிப் ஹாப் தமிழா |
பாடலாசிரியர் | மோகன்ராஜன் |
பாடகர்கள் | டீஜே, அல் ரூபியன் |
பாடல் வரிகள்:
காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும் இல்லையடி
கடலுக்குள்ளே மீன் அழுதால்
மீன் கண்ணீர் வெளியே தெரியாதே
உன்னை மெல்ல நீ உணர்ந்தால்
உன் காதல் என்றும் பிரியாதே
காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும் இல்லையடி
இதயம் கேட்கும் காதலுக்கு
வேறெதையும் கேட்டிட தெரியாது
அன்பை கேட்கும் காதலுக்கு
சந்தேகம் தாங்கிட முடியாது
மேடும் பள்ளம் இல்லாமல்
ஒரு பாதை இங்கு கிடையாது
பிரிவும் துயரம் இல்லாமல்
ஒரு காதலின் ஆழம் புரியாதே
காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும் இல்லையடி
கடலுக்குள்ளே மீன் அழுதால்
மீன் கண்ணீர் வெளியே தெரியாதே
உன்னை மெல்ல நீ உணர்ந்தால்
உன் காதல் என்றும் பிரியாதே
காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது இல்லையடி
கண்ணீர் ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும் இல்லையடி
இல்லையடி
இல்லையடி இல்லையடி
இல்லையடி இல்லையடி
ஓஹோ ஓஓ ஓஓ