Iravil Vanthathu Chandirana Song Lyrics in Tamil from Saguni Movie. Iravil Vanthathu Chandirana Song Lyrics penned in Tamil by Na.Muthukumar.
படத்தின் பெயர்: | சகுனி |
---|---|
வருடம்: | 2012 |
பாடலின் பெயர்: | மனசெல்லாம் மழையே |
இசையமைப்பாளர்: | GV பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | நா.முத்துக்குமார் |
பாடகர்கள்: | சோனு நிகம், சைந்தவி, GV பிரகாஷ் குமார் |
பாடல் வரிகள்
ஆண்: மனசெல்லாம் மழையே
நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து
தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே
ஆண்: என் கண்ணில் வந்து
நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே
ஆண்: இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா
பெண்: பகலில் இருப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம்தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்
ஆண்: மழையே…
மனம் உன்னாலே பூப்பூக்குதே
மனசெல்லாம் மழையே
நனைகிறேன் உயிரே
ஆண்: வானில் போகும் பறவைகளாய்
நீயும் நானும் திரிந்திடலாம்
உலகையே மறக்கலாம்
பெண்: வேறு வேறு விண்வெளியில்
மாறி மாறி திரிந்திடலாம்
பறக்கலாம் மிதக்கலாம்
பெண்: காற்றாகி
கைகோர்த்து போவோமே
ஆண்: முகிலாகி அங்கும் இங்கும்
ஊஞ்சல் ஆடுவோம்
பெண்: கனவில் வருவது சாத்தியமா
என் எதிரே நடப்பது மந்திரமா
நான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா
என் தேகம் எங்கும் நீந்தி போகுதோ
ஆண்: கனவில் வாழ்வது சாத்தியமே
என் கனவும் பலிப்பது நிச்சயமே
உன் விரலை பிடிப்பேன் இக்கனமே
உன் உருவம் என்னுள் என்றும் வாழுமே
ஆண்: மழையே…
மனம் உன்னாலே பூப்பூக்குதே
மனசெல்லாம் மழையே
நனைகிறேன் உயிரே
ஆண்: காதலாகி கரைந்துவிட்டால்
காலம் நேரம் மறந்திடுமே
வானிலை மாறுமே
பெண்: ஏழு வண்ண வானவிலில்
நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே மாயமே
பெண்: வெயிலோடு
மழை வந்து தூறுமே
ஆண்: முகிலாகி அங்கும் இங்கும்
ஊஞ்சல் ஆடுவோம்
ஆண்: தரையில் விண்மீன் வருவதில்லை
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்
பெண்: தரையில் விண்மீன் வருவதுண்டு
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்
ஆண்: மழையே…
மனம் உன்னாலே பூப்பூக்குதே
பெண்: மனசெல்லாம் மழையே