Elu Velaikaran Song Lyrics in Tamil

Ezhu Velaikkara Song Lyrics in Tamil from Velaikaran. Elu Velaikaran Song Lyrics Penned in Tamil by Viveka. Elu Velaikara Lyrics.

படத்தின் பெயர்:வேலைக்காரன்
வருடம்:2017
பாடலின் பெயர்:எழு வேலைக்காரா
இசையமைப்பாளர்:அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்:விவேகா
பாடகர்கள்:சித்தார்த் மகாதேவன்

பாடல் வரிகள்:

எழு வேலைக்காரா
எழு வேலைக்காரா இன்றே இன்றே
ஓயாதே சாயாதே
வாய் மூடி வாழாதே

எழு வேலைக்காரா இன்றே இன்றே
இனி செய்யும் வேலை நன்றே
அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே

வேர்வை தீயே தேசம் நீயே
உன் சொல் கேட்டே வீசும் காற்றே

போராடு ஓயாதே
தேயாதே சாயாதே
போராடு ஆறாதே
சோராதே வீழாதே
போராடு

எழு வேலைக்காரா இன்றே இன்றே
இனி செய்யும் வேலை நன்றே
அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே

போராடு போராடு
போராடு போராடு

முடியாத செயல் ஏதுமே
புவி மீது கிடையாது
எழுந்து வா புயலை போலே

பலம் என்ன புரியாமலே
பணிந்தோமே குனிந்தோமே
நிமிர்ந்து வா மேலே மேலே

ஒரு முறையே ஹே
தரையினில் வாழும் வாய்ப்பு
அதை முறையே ஹே
பயனுற வாழும் வாழ்க்கை ஆக்கு

உழைப்பவனே ஹே
எழுதிட வேண்டும் தீர்ப்பு
விதைத்தவனே ஹே
பசியென போனால் எங்கோ தப்பு

போராடு ஓயாதே
தேயாதே சாயாதே
போராடு ஆறாதே
சோராதே வீழாதே
போராடு

எழு வேலைக்காரா இன்றே இன்றே
இனி செய்யும் வேலை நன்றே
அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
வரலாறை மாற்று வென்றே

வேர்வை தீயே தேசம் நீயே
உன் சொல் கேட்டே வீசும் காற்றே

போராடு ஓயாதே
தேயாதே சாயாதே
போராடு ஆறாதே
சோராதே வீழாதே
போராடு