Egiri Kuthithen or Ale Ale Song Lyrics

Boys Movie Ale Ale or Egiri Kuthithen Song Lyrics in Tamil Font. Egiri Kuthithen or Ale Ale Song Lyrics has penned in Tamil by Kabilan.

படத்தின் பெயர்:பாய்ஸ்
வருடம்:2003
பாடலின் பெயர்:எகிறி குதித்தேன்
இசையமைப்பாளர்:ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்:கபிலன்
பாடகர்கள்:கார்த்திக், சித்ரா சிவராமன்

பாடல் வரிகள்:

ஆண்: எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது

ஆண்: அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலே

ஆண்: ஹே ஆனந்த தண்ணீர்
மொந்து குளித்தேன்
பெண்: ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்

ஆண்: கற்கண்டைத் தூக்கிக் கொண்டு
நடந்தேன் ஒரு எறும்பாய்
பெண்: நான் தண்ணீரில் மெல்ல மெல்ல
நடந்தேன் ஒரு இலையாய்

ஆண்: அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலே
பெண்: அலே அலே அலே அலே
ஆண்: அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே

ஆண்: காதல் சொன்ன கனமே
அது கடவுளைக் கண்ட கனமே
காற்றாய் பறக்குது மனமே ஓ

இருவரும்: காதல் சொன்ன கனமே
அது கடவுளைக் கண்ட கனமே
காற்றாய் பறக்குது மனமே ஓ

ஆண்: நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல்முழுதும் நிலா உதிக்கிறதே
பெண்: வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்

ஆண்: ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே

பெண்: அலே அலே அலே அலே
ஆண்: அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே

பெண்: கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்

ஆண்: காதல் சொன்ன கனமே
அது கடவுளைக் கண்ட கனமே
காற்றாய் பறக்குது மனமே ஓ

இருவரும்: காதல் சொன்ன கனமே
அது கடவுளைக் கண்ட கனமே
காற்றாய் பறக்குது மனமே ஓ

ஆண்: எகிறி குதித்தேன்
பெண்: வானம் இடித்தது
ஆண்: பாதங்கள் இரண்டும்
பெண்: பறவையானது

ஆண்: விரல்களின் காம்பில்
பெண்: பூக்கள் முளைத்தது
ஆண்: புருவங்கள் இறங்கி
பெண்: மீசையானது

ஆண்: அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலே

பெண்: மணல்முழுதும் இன்று சர்க்கரையா
கடல்முழுதும் இன்று குடிநீரா
ஆண்: கரைமுழுதும் உந்தன் சுவடுகளா
அலைமுழுதும் உந்தன் புன்னகையா

பெண்: காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே

ஆண்: அலே அலே அலே அலே
பெண்: அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே

ஆண்: வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதே

ஆண்: காதல் சொன்ன கனமே
அது கடவுளைக் கண்ட கனமே
காற்றாய் பறக்குது மனமே ஓ

இருவரும்: காதல் சொன்ன கனமே
அது கடவுளைக் கண்ட கனமே
காற்றாய் பறக்குது மனமே ஓ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *