Ini Acham Acham Illai Song Lyrics in Tamil from Indira Movie. Ini Acham Acham Illai Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | இந்திரா |
---|---|
வருடம்: | 1995 |
பாடலின் பெயர்: | அச்சம் அச்சம் இல்லை |
இசையமைப்பாளர்: | AR ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | சுஜாதா மோகன், அனுராதா ஸ்ரீராம் |
பாடல் வரிகள்:
பெண்1: விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
குழு: ஹே அச்சம் அச்சம் இல்லை
இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு
கண்ணீர் மிச்சமில்லையே
குழு: ஹே அச்சம் அச்சம் இல்லை
இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு
கண்ணீர் மிச்சமில்லையே
குழு: காலம் மாறிப்போச்சு
நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை
என்ற நம்பிக்கை உண்டாச்சு
குழு: காலம் மாறிப்போச்சு
நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை
என்ற நம்பிக்கை உண்டாச்சு
பெண்2: ஹே அச்சம் அச்சம் இல்லை
இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு
கண்ணீர் மிச்சமில்லையே
ஆண்: அந்த நிலா நிலா நிலா நிலா
வெகுண்டோடி வா
அந்த நிலா நிலா நிலா நிலா
வெகுண்டோடி வா
குழு: பட்டாம்பூச்சி சுற்றும்
மனிதன் என்ன மட்டம்
அட இன்னும் கொஞ்சும் போனால் என்ன
வானம் தலையில் தட்டும்
குழு: பட்டாம்பூச்சி சுற்றும்
மனிதன் என்ன மட்டம்
அட இன்னும் கொஞ்சும் போனால் என்ன
வானம் தலையில் தட்டும்
பெண்2: வாடி இளையசெல்லியே
வாடி இளையசெல்லியே
குழு: வாடி இளையசெல்லியே
வாடி இளையசெல்லியே
நம் காலம் சொல்லும்
நம்மை வாழச்சொல்லியே
பெண்2: அம்மா அழகுக் கண்ணம்மா
அம்மா அழகுக் கண்ணம்மா
குழு: அம்மா அழகுக் கண்ணம்மா
அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று
அழுத்திச்சொல்லம்மா
குழு: ஹே அச்சம் அச்சம் இல்லை
இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு
கண்ணீர் மிச்சமில்லையே
குழு: காலம் மாறிப்போச்சு
நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை
என்ற நம்பிக்கை உண்டாச்சு
குழு: லல்லா லல்லல்லல்லோ
பட்டாம்பூச்சி
குழு: வானம் பக்கம் இனி
வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால்
பக்கம் பக்கம் சொர்க்கம்
குழு: வானம் பக்கம் இனி
வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால்
பக்கம் பக்கம் சொர்க்கம்
குழு: பூமி தொறந்துகெடக்கு
அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு
அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
குழு: இனி அச்சம் அச்சம் இல்லை
இனி அடிமை எண்ணம் இல்லை
குழு: இனி அச்சம் அச்சம் இல்லை
இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு
கண்ணீர் மிச்சமில்லையே
பெண்1: இன்பக்காற்று வீசட்டும்
எட்டுத்திக்கும் பரவட்டும்
குழு: பரவட்டும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும்
பெண்1: மனிதப்பூக்கள் மலரட்டும்
மனங்கள் இன்னும் விடியட்டும்
குழு: விடியட்டும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும்
குழு: இன்பக்காற்று வீசட்டும்
எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும்
மனங்கள் இன்னும் விடியட்டும்
குழு: குற்றம் குற்றம் எரியட்டும்
சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும்
வானம் தொட்டு வளரட்டும்
குழு: வட்டம் வட்டம் விரியட்டும்
வானம் தொட்டு வளரட்டும்
குழு: கோழிச்சிறகில் குஞ்சை
போலவே பூமி பந்து உலவட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு
புத்தம் புதிதாய் விடியட்டும்