En Mel Vilunda Malai Thuliye Song Lyrics

En Mel Vilunda Malai Thuliye Song Lyrics from May Madham Movie. En Mel Vilunda Malai Thuliye Song Lyrics Penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:மே மாதம்
வருடம்:1994
பாடலின் பெயர்:என் மேல்விழுந்த
இசையமைப்பாளர்:AR ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:ஜெயச்சந்திரன், KS சித்ரா

பாடல் வரிகள்:

ஆண்: என் மேல்விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

பெண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

ஆண்: என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

பெண்: உடம்பில் உறைகின்ற
ஓர் உயிர் போல் உனக்குள்
தானே நான் இருந்தேன்

ஆண்: என் மேல் விழுந்த மழைத்துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
பெண்: இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

பெண்: மண்ணைத் திறந்தால் நீர் இருக்கும்
என் மனதைத் திறந்தால் நீ இருப்பாய்
ஆண்: ஒளியைத் திறந்தால் இசை இருக்கும்
என் உயிரைத் திறந்தால் நீ இருப்பாய்

பெண்: வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய்
ஆண்: இரவைத் திறந்தால் பகல் இருக்கும்
என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய்

பெண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

பெண்: இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
ஆண்: அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ

பெண்: மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
ஆண்: பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆய்விடுமோ

பெண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

ஆண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

பெண்: என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

ஆண்: உடம்பில் உறைகின்ற
ஓர் உயிர் போல் உனக்குள்
தானே நான் இருந்தேன்

பெண்: என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்