Nenjorathil Song Lyrics in Tamil from Pichaikkaran Movie. Nenjorathil Song Lyrics has penned in Tamil by Annamalai and Music by Vijay Antony.
படத்தின் பெயர்: | பிச்சைக்காரன் |
---|---|
வருடம்: | 2016 |
பாடலின் பெயர்: | நெஞ்சோரத்தில் |
இசையமைப்பாளர்: | விஜய் ஆண்டனி |
பாடலாசிரியர்: | அண்ணாமலை |
பாடகர்கள்: | சுப்ரியா ஜோஷி |
பாடல் வரிகள்
நெஞ்சோரத்தில்
என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல்
நுழைந்து விட்டாய் ஓ ஹோ
கடிகாரத்தில்
துளி நொடி நேரத்தில்
எந்தன் உயிரோடு
கலந்து விட்டாய் ஓ ஹோ
எனக்கு என்னானது
மனம் தடுமாறுது
விழி உன்னை தேடித்தான்
ஓடுது தேடுது
ஹோ நெஞ்சோரத்தில்
என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல்
நுழைந்து விட்டாய் ஓ ஹோ
என் காலடி மண்ணில் பதிந்தாலும்
நான் நூறடி உயரம் மிதக்கிறேன்
நீ ஓரடி தூரம் பிரிந்தாலும்
என் உயிரில் வலியை உணர்கிறேன்
புது கொள்ளைக்காரன் நீயோ
என் நெஞ்சை காணவில்லை
நான் உன்னை கண்ட பின்னால்
என் கண்கள் தூங்கவில்லை
இடைவெளி குறைந்து இருவரும் இருக்க
ஒரு துளி மழையில் இருவரும் குளிக்க
ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை
என்னை மயக்கி விட்டாயே
நெஞ்சோரத்தில்
என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல்
நுழைந்து விட்டாய் ஓ ஹோ
உன் கைகள் தொட்ட இடம் பார்த்து
நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன்
சிறு காகிதம் கையில் கிடைத்தாலும்
உன் பெயரை எழுதி ரசிக்கிறேன்
உன் கண்ணை உற்று பார்த்தால்
லட்சம் வார்த்தை சொல்லும்
அதில் ஏதோ ஒன்று என்னை
எங்கோ தூக்கி செல்லும்
ஒரு குடை பிடித்து இருவரும் நடக்க
விரல் நுனி உரசி வீதியை கடக்க
ஏன் இந்த ஆசை ஆயிரம் ஆசை
என்னை மயக்கி விட்டாயே
நெஞ்சோரத்தில்
என் நெஞ்சோரத்தில்
என்னை அறியாமல்
நுழைந்து விட்டாய் ஓ ஹோ
எனக்கு என்னானது
மனம் தடுமாறுது
விழி உன்னை தேடித்தான்
ஓடுது தேடுது
ஹோ நெஞ்சோரத்தில்