Kanna Thorakkanum Saami Song Lyrics in Tamil from Mundhanai Mudichu Movie. Kanna Thorakkanum Saami Song Lyrics has penned by Gangai Amaran.
பாடல்: | கண்ண தொறக்கணும் சாமி |
---|---|
படம்: | முந்தானை முடிச்சு |
வருடம்: | 1983 |
இசை: | இளையராஜா |
வரிகள்: | கங்கை அமரன் |
பாடகர்: | S ஜானகி, மலேசியா வாசுதேவன் |
Kanna Thorakkanum Saami Lyrics
பெண்: ஆரீரோ ஆரீரோ
ஆரீரோ ஆரீரோ
ஆராரோ ஆரிராரோ
பெண்: கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி
பெண்: கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
கண்ண தொறக்கணும் சாமி
கைய புடிக்கணும் சாமி
பெண்: வாலிபம் வாடுமே
வாடையும் கூடுமே
சாமிய கூடினா
சங்கடம் ஓடுமே
பெண்: வாலிபம் வாடுமே
வாடையும் கூடுமே
சாமிய கூடினா
சங்கடம் ஓடுமே
பெண்: தயக்கம் ஆகாது
தாமதம் கூடாது
தேகம்தான் வாடுது வாங்களேன்
அருள் தரும் திருக்கடலே
அரிக்குது என் உடலே
மோகம் தீர மோட்சம் தாராயோ
ஆண்: வேணாண்டி ஆம்பளை பாவம்
வாங்காத என்னோட சாபம்
ஆண்: ஏய் வேணான்டி ஆம்பளை பாவம்
வாங்காத என்னோட சாபம் ஏய்
கலையாது எந்தவம் அடியே
இறங்காது பாய்மர கொடியே
ஆண்: ஹேய் வேணான்டி ஆம்பளை பாவம்
வாங்காத என்னோட சாபம்
பெண்: மெத்த நான் போடுறேன்
பித்தனே ஓடிவா
முத்தமே மாலையாய்
மொத்தமா சூடவா
பெண்: மெத்த நான் போடுறேன்
பித்தனே ஓடிவா
முத்தமே மாலையாய்
மொத்தமா சூடவா
ஆண்: ஹேய் பக்தி மாறாது
பஜனையும் நிக்காது
என் தேகம் தீண்டாதே மயிலே
பெண்: புடிச்சது புடிச்சது தான்
புரிஞ்சிக்க என் குணம்தான்
ஆண்: பாதை மாறி போக மாட்டேன்டி
பெண்: கண்ண தொறக்கணும் சாமி
ஆண்: ஹைய்யோ
பெண்: கைய புடிக்கணும் சாமி
ஆண்: அடி வேணான்டி ஆம்பளை பாவம்
பெண்: ஹா
ஆண்: வாங்காத என்னோட சாபம்
பெண்: இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி
கண்ண தொறக்கணும் சாமி
ஆண்: ஹைய்யோ
பெண்: கைய புடிக்கணும் சாமி
ஆண்: எம்மா
பெண்: கண்ண தொறக்கணும் சாமி
ஆண்: ம்ம்ஹும்
பெண்: கைய புடிக்கணும் சாமி
ஆண்: அய்யோ