Ennai Kollathey Song Lyrics in Tamil

Ennai Kollathey Song Lyrics in Tamil from Geethaiyin Raadhai Movie. Ennai Kollathey Song Lyrics written in Tamil by Kavi Nayagan Yuvaji.

படத்தின் பெயர்கீதையின் ராதை
வருடம்2016
பாடலின் பெயர்என்னை கொள்ளாதே
இசையமைப்பாளர்ஸ்ட்டீஸ்
பாடலாசிரியர்கவி நாயகன் யுவாஜி
பாடகர்கள்குமரேஷ் கமலக்கண்ணன்,
கேஷ்வினி சரவணன்
பாடல் வரிகள்:

ஆண்: என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி

ஆண்: உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல்
கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை
என்னுள் நீ வந்தாய் நெஞ்சில் வாழ்கின்றாய்
விட்டு செல்லாதே இது நியாயமில்லை

பெண்: கண்ணை மூடி கொண்டாலும் உன்னை கண்டேன்
மீண்டும் ஏன் இந்த ஏக்கம்
வெள்ளை மேக துண்டுக்குள் எழும் மின்னல் போல்
எந்தன் வாழ்வெங்கும் மின்னல்

பெண்: என் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்
என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்
சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே
தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே

பெண்: ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய்
எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்
என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய்
உந்தன் சொல்லாலே தூரம் உண்டாக்கினாய்

பெண்: என்னை தீண்டாதே என்னை பார்க்காதே
ஒன்றும் பேசாதே போதும் துன்பங்கள்

ஆண்: என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே
வேண்டும் உன் காதல் ஒன்றே
உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை
இன்னும் ஏன் இந்த ஊடல்

ஆண்: என் உயிர் காதலை உந்தன் காதோரம்
ஒரு முறையாவது சொல்ல நீ வேண்டும்
எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ
இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ

ஆண்: உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி
நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி

ஆண்: என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி

ஆண்: என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *