Yenadi Nee Enna Ippadi Song Lyrics in Tamil

Yenadi Nee Enna Ippadi Song Lyrics in Tamil from Adhagappattathu Magajanangalay. Yenadi Nee Enna Ippadi Song Lyrics penned by Yugabharathi.

பாடல்:ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
படம்:அதாகப்பட்டது மகாஜனங்களே
வருடம்:2016
இசை:டி.இமான்
வரிகள்:யுகபாரதி
பாடகர்:கார்த்திக், ஸ்ரேயா கோஷல்

Yenadi Nee Enna Ippadi Lyrics

ஆண்: ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
பெண்: மொத்தமும் கையில வந்தது போல
மேகத்து மேல நான் வைக்குறேன் கால

ஆண்: வேறேதும் தோணல
அடியே ஆனந்தம் தாங்கல
பெண்: வேறேதும் தோணல
அடடா ஆனந்தம் தாங்கல

ஆண்:  ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
பெண்: காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன

ஆண்: மெட்டில் இசைஞானி
என்றும் அழகாக
செய்கின்ற மாயம் போல

பெண்: என்னில் பல நூறு
இன்பம் தர நீயும்
வந்தாயே கூடி வாழ

ஆண்: நித்தமும் கோயில் சென்று
வரும் பக்தர்கள் செய்வது யாகம் 
பெண்: அத்தனை பேரும் ஏங்க
வரம் என்னிடம் வந்தது யோகம்

ஆண்: போதும் இது போதும்
உனது அன்புக்கு ஈடில்லை ஏதும்

ஆண்: ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
பெண்: காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன

பெண்: தன்னந்தனி வீடு
செல்வம் பதினாறு
வந்தாலும் தேவை நீயே

ஆண்:அன்னை மடி வாசம்
உன்னில் தினம் வீச
கொண்டேனே காதல் நோயே

பெண்: எத்தனை கோடி ஜென்மம்
உயிர் வந்தது உன்னையும் தேடி
ஆண்: ஒப்பனை ஏதும் இல்லா
உன்னை விட்டெங்கு சென்றிடும் ஓடி

பெண்: நாடி உனைக்கூடி
வரும் இன்பத்தில் போரேனே ஆடி

ஆண்:ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
பெண்: காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
ஆண்: மொத்தமும் கையில வந்தது போல
மேகத்து மேல நான் வைக்குறேன் கால

பெண்: வேறேதும் தோணல
அடடா ஆனந்தம் தாங்கல
ஆண்: வேறேதும் தோணல
அடியே ஆனந்தம் தாங்கல

ஆண்: ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
பெண்: காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *