Tamizhan Endru Sollada Song Lyrics in Tamil

Tamizhan Endru Sollada Song Lyrics in Tamil from Bhoomi Movie. Tamilan Endru Sollada Song Lyrics has penned in Tamil by Madhan Karky.

படத்தின் பெயர்:பூமி
வருடம்:2020
பாடலின் பெயர்:தமிழன் என்று சொல்லடா
இசையமைப்பாளர்:டி. இமான்
பாடலாசிரியர்:மதன் கார்க்கி
பாடகர்கள்:டி. இமான், அனிரூத் ரவிச்சந்தர்,
லாவண்யா சுந்தரராமன்
Tamizhan Endru Sollada Lyrics in Tamil

ஆண்1: தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

ஆண்1: தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

ஆண்1: பூமி எங்கும் சுற்றி வந்தேன்
விண்ணைத்தொட்டும் வந்தேனே
இந்த மண்ணில் ஏதோ ஒன்று

ஆண்1: வேற்று மொழி சொற்கள் எல்லாம்
கேட்டுக்கொண்டு வந்தேனே
என் தமிழில் ஏதோ ஒன்று

ஆண்2: பிரிந்திடும் வரை இதன்
பெருமைகள் எதுவும்
அறிந்திடவில்லை நெஞ்சம்

ஆண்2: மறுபடி பாதத்தினை நான்
பதிக்கும் பொழுது
சிலிர்க்கிறது தேகம் கொஞ்சம்

ஆண்2: நரம்புகள் அனைத்திலும் அறம்
என்னும் உரம் தான்
உலகத்தின் முதல் நிறம்
தமிழ் நிறம் தான்

ஆண்2: ஏழு கோடி முகம் ஆனால்
ஒரே ஒரு பெயர் தான்
அது வெறும் பெயர் இல்லை
எங்கள் உயிர் தான்

குழு: தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

குழு: தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

ஆண்2: தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

ஆண்2: தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

ஆண்1: பிசா பர்கர் உண்டு வந்தேன்
பாஸா தின்றும் வந்தேனே
இட்டிலியில் ஏதோ ஒன்று
ஆண்2: ஏதோ ஒன்று…

ஆண்1: ராக் அண்ட் ரோல் கேட்டு வந்தேன்
ஜாஸ்ஜில் மூழ்கி வந்தேனே
நம் பறையில் ஏதோ ஒன்று
ஆண்2: ஏதோ ஒன்று…

ஆண்2: உறவுகள் என்னும் சொல்லின்
அர்த்தம் கண்டு பிடிக்க
வேறு இடம் மண்ணில் இல்லை

ஆண்2: ஏ மொழி வெறும் ஒலியில்லை
வழி என்று உரைத்த
வேறு இனம் எங்கும் இல்லை

ஆண்2: நரம்புகள் அனைத்திலும் அறம்
என்னும் உரம் தான்
உலகத்தின் முதல் நிறம்
தமிழ் நிறம் தான்

ஆண்2: ஏழு கோடி முகம் ஆனால்
ஒரே ஒரு பெயர் தான்
அது வெறும் பெயர் இல்லை
எங்கள் உயிர் தான்

குழு: தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

குழு: தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

ஆண்1: கோட்டு அதை கழட்டிவிட்டு
பேண்டு அதை கொழுத்திபுட்டு
வேட்டியை நீ மடிச்சு கட்டு
தகிட தகிட தகிட தகிட

ஆண்1: சகதியில் கால விட்டு
நாத்து நாட்டும் தாளம் இட்டு
எட்டு கட்ட பாட்டு கட்டு
தகிட தகிட தகிட தகிட

ஆண்2: ஆயிரம் ஆண்டின் முன்னே
சித்தர் சொன்னதெல்லாமே
இன்று தான் நாசா சொல்லும்

ஆண்2: நிலவை முத்தமிட்டு
விண்கலத்தில் ஏறி
தமிழோ விண்ணைத்தாண்டி வெல்லும்

குழு: கிழவிகள் மொழி அனுபவ உளி
ஆண்2: அதிலுண்டு பூமிப்பந்தின் மொத்த அறிவு
குழு: குமரிகள் விழி சிதறிடும் ஒளி
ஆண்2: அதிலுண்டு பூமிப்பந்தின் மொத்த அழகு

ஆண்2: ஏழு கோடி இதயத்தில் ஒரே துடிப்பு
எங்கள் விழிகளில் எரிவது ஒரே நெருப்பு
உலகினுக்கோளி தர அதை பரப்பு
இந்த இனத்தினில் பிறப்பதே தனிச்சிறப்பு

குழு: தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

குழு: தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

ஆண்2: தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

ஆண்2: தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியை நீ வெல்லடா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *