Latchavathiye Song Lyrics in Tamil from 4 Student Movie. Latchavathiye Song Lyrics has sung and composed in Tamil by Jassie Gift.
பாடலின் பெயர்: | லஜ்ஜாவதியே |
---|---|
படத்தின் பெயர்: | 4 ஸ்டூடெண்ட் |
வருடம்: | 2004 |
இசையமைப்பாளர்: | ஜெஸ்ஸி கிப்ட் |
பாடலாசிரியர்: | – |
பாடகர்: | ஜெஸ்ஸி கிப்ட் |
பாடல் வரிகள்:
லஜ்ஜாவதியே என்ன
அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்ன
அசத்துற ரதியே
ராட்சசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஓடுறீயே
தொட்டவுடன் ஓடுறீயே யே
தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
ஏ தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
அழகினாலே அடிமையாக்கும்
ராஜ ராஜ ராணி
அடி லஜ்ஜாவதியே என்ன
அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்ன
அசத்துற ரதியே
பூவரச இலையிலே
பீப்பீ செஞ்சி ஊதினோம்
பள்ளிக்கூடம் பாடம் மறந்து
பட்டாம்பூச்சி தேடினோம்
தண்ணிப்பாம்பு வரப்பில் வர
தலை தெறிக்க ஓடினோம்
பனங்காயின் வண்டியில்
பசு மாட்டு தொழுவத்தை
சுற்றி வந்து பாம்பேக்கு
போனதாக சொல்லினோம்
அடடா வசந்தம்
அதுதான் வசந்தம்
மீண்டும் அந்த காலம் வந்து
மழலையாக மாற்றுமா
லஜ்ஜாவதியே என்ன
அசத்துற ரதியே
அடி லஜ்ஜாவதியே என்ன
அசத்துற ரதியே
காவேரி நதியிலே
தூண்டில்கள் போட்டதும்
கண்ணே உன் தூண்டில் முள்ளில்
குட்டி தவளை விழுந்ததும்
கை கொட்டி கேலி செய்த
ஞாபகங்கள் மறக்குமா
கட்ட வண்டி மையினால்
கட்ட பொம்மன் மீசையை
கண்ணே நீ வரைந்து விட்டு
ராஜ ராஜன் என்றதும்
அடடா வசந்தம்
அதுதான் வசந்தம்
காலம் கடந்து போன பின்னும்
காதல் கடந்து போகுமா
லஜ்ஜாவதியே என்ன
அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்ன
அசத்துற ரதியே
ராட்சசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஓடுறீயே
ஏ தொட்டாச்சிணுங்கி பெண் தானோ
அழகினாலே அடிமையாக்கும்
ராஜ ராஜ ராணி
லஜ்ஜாவதியே என்ன
அசத்துற ரதியே
அடி லஜ்ஜாவதியே
என்ன அசத்துற ரதியே
This very butiful song