Kanave Kanave Song Lyrics in Tamil from David Movie. Kanave Kanave or Mounamana Maranam Ondru Song Lyrics has penned by Anirudh Ravichander.
படத்தின் பெயர்: | டேவிட் |
---|---|
வருடம்: | 2013 |
பாடலின் பெயர்: | கனவே கனவே |
இசையமைப்பாளர்: | அனிரூத் ரவிச்சந்தர் |
பாடலாசிரியர்: | அனிரூத் ரவிச்சந்தர் |
பாடகர்: | அனிரூத் ரவிச்சந்தர் |
பாடல் வரிகள்:
மௌனமான மரணம் ஒன்று
உயிரை கொண்டு போனதே
உயரமான கனவு இன்று
தரையில் வீழ்ந்து போனதே
திசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்
கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே அரைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ
கண்கள் ரெண்டும் நீரிலே
மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா
நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை
இது நியாயமா மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா
கனவே கனவே
கரங்கள் ரணமாய்
நினைவே நினைவே அரைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ