Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Hara Hara Sivane Song Lyrics in Tamil

Hara Hara Sivane Song Lyrics in Tamil from Shivan Songs. Hara Hara Sivane Arunachalane Song Lyrics has sung in Tamil by SP Balasubrahmanyam.

Hara Hara Sivane Lyrics in Tamil

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

ஹர ஹர சிவனே
அருணாசலனே
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நம சிவாய

சிவ சிவ ஹரனே
சோனாச்சலனே
அண்ணாமலையே போற்றி
ஹர ஓம் நம சிவாய

அணலே நமசிவாயம்
அலலே நமசிவாயம்
கனலே நமசிவாயம்
காற்றே நமசிவாயம்

புலியின் தோலை
இடையில் அணிந்த
புனிதக்கடலே போற்றி
சிவ ஓம் நமசிவாய

கலியின் தீமை
யாவும் நீக்கும்
கருணை கடலேப் போற்றி
ஹர ஓம் நமசிவாய

புனலே நமசிவாயம்
பொருளே நமசிவாயம்
புகழே நமசிவாயம்
புனிதம் நமசிவாயம்

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

சிவனார் கங்கை
கரையில் அமர்ந்த
சீதழ ஒளியே போற்றி
சிவ ஓம் நம சிவாய

தவமே செய்யும்
தபோவனத்தில்
ஜோதி லிங்கனே போற்றி
ஹர ஓம் நம சிவாய

வேதம் நமசிவாயம்
நாதம் நமசிவாயம்
பூதம் நமசிவாயம்
கோதம் நமசிவாயம்

மணிப்பூர் அகமாய்
சூட்சுமம் காட்டும்
அருணாசலனே போற்றி
சிவ ஓம் நமசிவாய

மங்கள சிவனாய்
தங்கிடும் வடிவே
செங்கனல் வண்ணா போற்றி
ஹர ஓம் நமசிவாய

அன்பே நமசிவாயம்
அணியே நமசிவாயம்
பண்பே நமசிவாயம்
பரிவே நமசிவாயம்

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நினைத்த உடனே
முக்தியை தந்திடும்
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமசிவாய

நிம்மதி வாழ்வினில்
நித்தமும் தந்திட
சன்னிதி கொண்டாய் போற்றி
ஹர ஓம் நமசிவாய

அருளே நமசிவாயம்
அழகே நமசிவாயம்
இருளே நமசிவாயம்
இனிமை நமசிவாயம்

சித்தர் பூமியாய்
சிவலயம் காட்டும்
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமசிவாய

பக்தர் நெஞ்சினை
சிவமயாமாக்கும்
சிவபெருமானே போற்றி
ஹர ஓம் நமசிவாய

குருவே நமசிவாயம்
உயிரே நமசிவாயம்
அருவே நமசிவாயம்
அகிலம் நமசிவாயம்

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

அன்னை உமைக்கு
இடமாய் உடலில்
ஆலயம் தந்தாய் போற்றி
சிவ ஓம் நமசிவாய

சொன்ன வண்ணமே
செய்யும் நாதனே
சோனாசலனே போற்றி
ஹர ஓம் நமசிவாய

ஆதியும் நமசிவாயம்
அந்தமும் நமசிவாயம்
ஜோதியும் நமசிவாயம்
சுந்தரம் நமசிவாயம்

சூரியன் சந்திரன்
அஷ்டவ சுட்கள்
கொழுதிடும் நாதா போற்றி
சிவ ஓம் நமசிவாய

சுந்தரி உன்ன
முளையுடன் திகழும்
அண்ணாமலையே போற்றி
ஹர ஓம் நமசிவாய

சம்பவம் நமசிவாயம்
சத்குரு நமசிவாயம்
அம்பிகை நமசிவாயம்
ஆகமம் நமசிவாயம்

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

எட்டா நிலையில்
நெட்டாய் எழுந்த
ஏகலிங்கனே போற்றி
சிவ ஓம் நமசிவாய

பற்றாய் இருந்து
பற்றும் எவருக்கும்
பாதை காட்டுவாய் போற்றி
ஹர ஓம் நமசிவாய

கதிரும் நமசிவாயம்
சுடரும் நமசிவாயம்
புதிரும் நமசிவாயம்
புவனம் நமசிவாயம்

ஜோதி பிழம்பின்
சுடரில் கனிந்த
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமசிவாய

ஆதி பிழம்பில்
ஆலயம் கொண்ட
அடி அண்ணாமலை போற்றி
ஹர ஓம் நம சிவாய

குளிரே நமசிவாயம்
முகிலும் நமசிவாயம்
கனியும் நமசிவாயம்
பருவம் நமசிவாயம்

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

குமரகுருவான
குகனே பணிந்த
குருலிங்கேச போற்றி
சிவா ஓம் நம சிவாய

இமையமலை மீதி
வாசம் புரியும்
அமரோர் அரசே போற்றி
ஹர ஓம் நம சிவாய

மண்ணும் நமசிவாயம்
மரமும் நமசிவாயம்
விண்ணும் நமசிவாயம்
விளைவும் நமசிவாயம்

மனிமையம் ஆகிய
மந்திர மலையில்
சுந்தரம் ஆனாய் போற்றி
சிவா ஓம் நம சிவாய

அணியா பரணம்
பல வகை சூடும்
அருணாசலனே போற்றி
ஹர ஓம் நம சிவாய

மலையே நமசிவாயம்
மலரே நமசிவாயம்
சிலையே நமசிவாயம்
சிகரம் நமசிவாயம்

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

கம்பத்திளையான்
குகனை கண்ணில்
படைத்த சிவனே போற்றி
சிவா ஓம் நம சிவாய

நம்பிய நெஞ்சில்
நலமே அளிக்கும்
நாதாபாரனா போற்றி
ஹர ஓம் நம சிவாய

திருவே நமசிவாயம்
தெளிவே நமசிவாயம்
கருவே நமசிவாயம்
கனிவே நமசிவாயம்

அருணை நகர
சிகரம் விரிந்த
அக்னி லிங்கனே போற்றி
சிவா ஓம் நம சிவாய

கருணையை வேண்டி
காலடி பணிந்து
சரணம் செய்தோம் போற்றி
ஹர ஓம் நம சிவாய

பெண்ணும் நமசிவாயம்
ஆணும் நமசிவாயம்
எண்ணம் நமசிவாயம்
ஏகம் நமசிவாயம்

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

மூன்று மூர்த்திகளின்
வடிவாய் எழுந்த
முக்கண் அரசே போற்றி
சிவா ஓம் நம சிவாய

தோன்றி வளர்ந்து
துலங்கிடும் கதிரே
சூலனாதனே போற்றி
ஹர ஓம் நம சிவாய

ஒளியே நமசிவாயம்
உணர்வே நமசிவாயம்
வெளியே நமசிவாயம்
இசையே நமசிவாயம்

மௌன வடிவாகி
மோகனம் காட்டும்
மூர்த்தி லிங்கனே போற்றி
சிவா ஓம் நம சிவாய

ஞானம் வழங்கி
நற்கதி அருளும்
நந்தி வாகன போற்றி
ஹர ஓம் நம சிவாய

ராகம் நமசிவாயம்
ரகசியம் நமசிவாயம்
யோகம் நமசிவாயம்
யாகம் நமசிவாயம்

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

அர்தனாரியாய்
வித்தகம் செய்யும்
அருணாசலனே போற்றி
சிவா ஓம் நம சிவாய

நர்த்தனம் தாண்டவம்
நாடகம் ஆடும்
நாக நாதனே போற்றி
ஹர ஓம் நம சிவாய

அதிர்வும் நமசிவாயம்
அசைவும் நமசிவாயம்
இலையும் நமசிவாயம்
நிறைவும் நமசிவாயம்

ரமண முனிக்கு
ரகசியம் சொன்ன
ராஜ லிங்கனே போற்றி
சிவா ஓம் நம சிவாய

இமையோர் தலைவன்
பதவியும் வழங்கும்
ஈச மகேச போற்றி
ஹர ஓம் நம சிவாய

கொடையும் நமசிவாயம்
கொண்டாலும் நமசிவாயம்
வாடையும் நமசிவாயம்
தென்றலும் நமசிவாயம்

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

பரணி தீபமாய்
தரணியில் ஒளிரும்
பரமேஸ்வரனே போற்றி
சிவா ஓம் நம சிவாய

ஹர ஹர என்றால்
வர மழை பொழியும்
ஆதிலிங்கனே போற்றி
ஹர ஓம் நம சிவாய

சித்தியும் நமசிவாயம்
முக்தியும் நமசிவாயம்
பக்தியும் நமசிவாயம்
சக்தியும் நமசிவாயம்

கார்த்திகை திருநாள்
உற்சவம் காணும்
தீப சுடரே போற்றி
சிவா ஓம் நம சிவாய

தீர்த்தம் யாவிலும்
நீரடிடுவாய்
அருணாசலனே போற்றி
ஹர ஓம் நம சிவாய

நிலவே நமசிவாயம்
நிஜமே நமசிவாயம்
கலையே நமசிவாயம்
நினைவே நமசிவாயம்

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

சுற்றிட சுற்றிட
வெற்றிகள் வழங்கும்
சொனாச்சலனே போற்றி
சிவா ஓம் நம சிவாய

பொற்சபை தன்னில்
அற்புத நடனம்
புரியும் பரனே போற்றி
ஹர ஓம் நம சிவாய

லிங்கம் நமசிவாயம்
லீலையும் நமசிவாயம்
கங்கையும் நமசிவாயம்
கருணையும் நமசிவாயம்

சோனை நதி தீரம்
கோயில் கொண்ட
அருணாசலனே போற்றி
சிவா ஓம் நம சிவாய

வானவெளி தனை
கோபுரம் ஆக்கி
மலையில் நிறைந்தாய் போற்றி
ஹர ஓம் நம சிவாய

செல்வம் நமசிவாயம்
சேரும் நமசிவாயம்
வில்வம் நமசிவாயம்
வேஷம் நமசிவாயம்

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

ஆதிரை அழகா
ஆவுடை மேலே
அமரும் தலைவா போற்றி
சிவா ஓம் நம சிவாய

வேதியர் போற்றும்
வேஞ்சடை இறைவா
வேத பொருளே போற்றி
ஹர ஓம் நம சிவாய

முதலும் நமசிவாயம்
முடிவும் நமசிவாயம்
இடையும் நமசிவாயம்
விடையும் நமசிவாயம்

நாக முடியுடன்
யோகம் புரியும்
நாகேஸ்வரனே போற்றி
சிவா ஓம் நம சிவாய

மேக நடுவிலே
திருநீர் அணியும்
அருநேஸ்வரனே போற்றி
ஹர ஓம் நம சிவாய

அம்மையும் நமசிவாயம்
அப்பனும் நமசிவாயம்
நன்மையையும் நமசிவாயம்
நாதனும் நமசிவாயம்

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

அடிமுடி இல்லா
ஆனந்த வடிவே
அண்ணாமலையே போற்றி
சிவா ஓம் நம சிவாய

அம்மை அப்பனை
அகிலம் காக்கும்
அமுதேஸ்வரனே போற்றி
ஹர ஓம் நம சிவாய

அதுவும் நமசிவாயம்
இதுவும் நமசிவாயம்
எதுவும் நமசிவாயம்
எதிலும் நமசிவாயம்

விடையம் காலை
வாகனம் ஏறி
விண்ணில் வருவாய் போற்றி
சிவா ஓம் நம சிவாய

வேண்டிய கணமே
எண்ணிய கணமே
கண்ணில் தெரிவாய் போற்றி
ஹர ஓம் நம சிவாய

சூலம் நமசிவாயம்
சுகமே நமசிவாயம்
நீளம் நமசிவாயம்
நித்தியம் நமசிவாயம்

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

பௌர்ணமி நாளில்
பிறைநிலவணியும்
மகாதேவனே போற்றி
சிவா ஓம் நம சிவாய

ஔஷத மலையாய்
பிணிகள் தீர்க்கும்
அருணாச்சலமே போற்றி
ஹர ஓம் நம சிவாய

தீபம் நமசிவாயம்
திருவருள் நமசிவாயம்
ரூபம் நமசிவாயம்
ருத்ரம் நமசிவாயம்

பனி கைலாயம்
தீ வடிவாகிய
அண்ணாமலையே போற்றி
சிவா ஓம் நம சிவாய

பணிவடிவாகிய
தென்னடுடையாய்
திருவருலேசா போற்றி
ஹர ஓம் நம சிவாய

எங்கும் நமசிவாயம்
எல்லாம் நமசிவாயம்
எழிலும் நமசிவாயம்
என்றும் நமசிவாயம்

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய

நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.