Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Chinthala Karaiyil Song Lyrics in Tamil

Chinthala Karaiyil Song Lyrics from Sri Raja Rajeshwari Tamil Movie. Chinthala Karaiyil Song Lyrics penned in Tamil by Kalidasan.

படத்தின் பெயர்:ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி
வருடம்:2001
பாடலின் பெயர்:சிந்தல கரையில் குடியிருக்கும்
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:காளிதாசன்
பாடகர்கள்:KS சித்ரா

பாடல் வரிகள்:

சிந்தல கரையில் குடியிருக்கும்
தாயே வெக்காளி
பத்தினி பெண்கள் குறை தீர்க்க
வாடி மாகாளி

அக்கினி ஏந்தி வலம் வந்தேன்
அங்கப்பிரார்த்தனை செய்தேனே
நித்தமும் உனக்கு சேவை செய்தேன்
நெய்விளக்கேற்றி பூஜை செய்தேன்

கணவன் உயிரை காக்கத்தானே
மடியை ஏந்தி பிச்சை கேட்டேன்
இனியும் மௌனம் என்னம்மா

நாக மலையில் குடியிருக்கும்
தாயே நாகாத்தா
பத்தினி பெண்கள் குறை தீர்க்க
வாடி பூவாத்தா

அக்கினி ஏந்தி வலம் வந்தேன்
அங்கப்பிரார்த்தனை செய்தேனே
நித்தமும் உனக்கு சேவை செய்தேன்
நெய்விளக்கேற்றி பூஜை செய்தேன்

கணவன் உறவை வேண்டித்தானே
மடியை ஏந்தி பிச்சை கேட்டேன்
எனது தவறு என்னம்மா

ஆதாரம் இல்லாமல் வாழ்கின்ற பூவுக்கு
சுகம் கூட சுடுகின்ற சுமைதானம்மா
ஆகாயம் இல்லாமல் நிலவொன்று வாழுமா
அகிலாண்ட ஈஸ்வரியே பதில் கூறம்மா

விண்ணுலகை அளந்தாலும்
மண்ணுலகில் வாழ்கின்ற
பெண்ணினத்தின் மரியாதை
மாங்கல்யமே

என் கணவன் கற்புதனை
இன்னொருத்தி தீண்டினால்
உன்னுடைய சக்தி இங்கு
பொய்யாகுமே

ஊசி முனை மேலே
ஒரு காலில் நின்று
ஈசன் துணை கேட்ட
மாங்காட்டம்மா

ஒரு வானம் ஒரு பூமி
தாயே என் சிவகாமி
அதில் இன்று பிரிவாகுமா

ஒரு பூவில் ஒரு வாசம்
அதுதானே என் வாசம்
நீ கூட பெண்தானம்மா

உனது மகள் நானே
எனது குறை தீர்க்க
அபய கரம் தன்னை
நீ காட்டம்மா

ஒரு பிறவி எடுத்தேன்
மறுபிறவி கொடுத்தாய்
அது கூட என் வாழ்வில் ஏமாற்றமா

அலங்காரி மீனாக்ஷியே
குலம் காக்கும் காமாக்ஷியே
தனியான நவகாளியே
தாம்பத்தியம் எனக்கில்லையே

கணவனுக்கு தவமிருந்து
மணமுடித்த கதைகள் இங்கு
உனது வரலாற்றிலே அன்னையே
பல உண்டம்மா

சிந்தல கரையில் குடியிருக்கும்
தாயே வெக்காளி
பத்தினி பெண்கள் குறை தீர்க்க
வாடி மாகாளி

அக்கினி ஏந்தி வலம் வந்தேன்
அங்கப்பிரார்த்தனை செய்தேனே
நித்தமும் உனக்கு சேவை செய்தேன்
நெய்விளக்கேற்றி பூஜை செய்தேன்

கணவன் உயிரை காக்கத்தானே
மடியை ஏந்தி பிச்சை கேட்டேன்
இனியும் மௌனம் என்னம்மா

ஒரு கண்ணில் இருபாவம்
செய்கின்ற புதுமாயம்
தாயே நீ விளையாடும் விதி வேடமா

அழகோடு பருவத்தை
உருவாக்கி எனை இங்கு
தனியாக்கி ரசிப்பது உன் பிடிவாதமா

உன்னிலொரு பாதி
உன் மன்னவனின் உடலென்று
உலகுக்கு சொன்னவள் நீதானம்மா

என் மகளின் தொடர்பாக
மண்ணுலகில் வாழுமென்
மன்னவனை நினைப்பது தவறாகுமா

தாலி வரம்தானே
தாயே உனை கேட்டேன்
மாரி உனை வேண்டி
மண் சோறு தின்றேன்

பூஜைக்கு உதவாத
பூவாகி வாடினேன்
அதுதான் என் விதியாகுமா

உளமார மணிச்சிட்டு
துணைதன்னை இழந்தாலே
தனியாக வாழாதம்மா

என்னுடைய பிறப்பு
உன்னுடைய படைப்பு
உனையன்றி எனக்கிங்கு
துணை ஏதம்மா

கண்விழித்த நாளாய்
உன் நிழலில் வளர்ந்தேன்
உன்னையன்றி எனக்கு
ஒரு தாயேதம்மா

என் கேள்வி தவறாகுமா
தாயே நீ பதில் கூறம்மா
மாங்கல்யம் நீ தந்தது
அதில் சோதனை ஏன் வந்தது

ஒருவனுக்கு ஒருத்தி என்று
தமிழ் மரபை மதித்து எந்தன்
கணவனை நீ மீட்டு கொடு
இல்லையேல் எனை கொன்றிடு

Search

All lyrics are provided for educational purpose only.