Arima Arima Song Lyrics in Tamil from Enthiran Movie. Ivan Perai Sonnathum or Arima Arima Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
பாடல்: | அரிமா அரிமா |
---|---|
படம்: | எந்திரன் |
வருடம்: | 2010 |
இசை: | AR ரஹ்மான் |
வரிகள்: | வைரமுத்து |
பாடகர்: | ஹரிஹரன், ஷாதனா சர்கம் |
Arima Arima Lyrics in Tamil
குழு: இவன் பேரை சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்
குழு: இவன் உலகம் தாண்டி
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
குழு: அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
ஆண்: அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன்போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா
ஆண்: ராஜாத்தி உலோகத்தில்
ஆசை தீ கொல்லுதடி
நான் அட்லாண்டிக்கை
ஊற்றிப் பார்த்தேன்
அக்கினி அணையலையே
ஆண்: உன் பச்சை தேனை ஊற்றி
என் இச்சை தீயை ஆற்று
அடி கச்சைக்கனியே பந்தி நடத்து
கட்டில் இலை போட்டு
ஆண்: அரிமா அரிமா
அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன்போல் பொன்மான் கிடைத்தால்
சும்மா விடுமா
குழு: இவன் பேரை சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
குழு: இவன் உலகம் தாண்டி
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
குழு: அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
ஆண்: சிற்றின்ப நரம்பு
சேமித்த இரும்பில்
சட்டென்று மோகம் பொங்கிற்றே
பெண்: ராட்ஷசன் வேண்டாம்
ரசிகன் வேண்டும்
பெண் உள்ளம் உன்னை கெஞ்சிற்றே
பெண் உள்ளம் உன்னை கெஞ்சிற்றே
ஆண்: நான் மனிதன் அல்ல
அஃற்றினையின் அரசன் நான்
காமுற்ற கணினி நான்
சின்னஞ்சிறுசின் இதயம் தின்னும்
சிலிக்கன் சிங்கம்தாதான்
குழு: எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா
ஆண்: அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன்போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா
பெண்: மேகத்தை உடுத்தும்
மின்னல்தான் நானென்று
ஐஸ்சுக்கே ஐஸை வைக்காதே
ஆண்: வயரெல்லாம் ஓசை
உயிரெல்லாம் ஆசை
ரோபோவை போ போவென்னாதே
பெண்: ஏ ஏழாம் அறிவே
உள் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்
நீ உண்டு முடித்த மிச்சம்
எதுவோ அதுதான் நான் என்றாய்
குழு: இவன் பேரை சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைத்தட்டும்
குழு: இவன் உலகம் தாண்டி
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலைமுட்டும்
குழு: அடி அழகே உலகழகே
இந்த எந்திரன் என்பவன்
படைப்பின் உச்சம்
ஆண்: அரிமா அரிமா
நானோ ஆயிரம் அரிமா
உன்போல் பொன்மான் கிடைத்தால்
யம்மா சும்மா விடுமா
குழு: எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா