Thangamana Purushan Serial Song Lyrics in Tamil

Kalaignar TV Thangamana Purushan Serial Song Lyrics in Tamil Font. Old Tamil Serial Thangamana Purushan Song Lyrics in Tamil Font.

பாடல் வரிகள்:

தங்கம் போல குணம் இருக்கனும்
தாய போல மனம் இருக்கனும்
மனசு போல வாய்ச்சிருக்கனும்
மனைவி பேச்ச கேட்டிருக்கனும்
அவனே தங்கமான புருஷன்

மூக்கும் முழியும் அமைஞ்சிருக்கனும்
பார்க்கும் படியா அழகிருக்கனும்
அத்த மாமனு மதிச்சிருக்கனும்
அன்பு பொங்கும் மனசிருக்கனும்
அவனே தங்கமான புருஷன்

சம்பளம் மொத்தமும் வீடு வந்தாகனும்
சம்சாரம் கையில அத தந்தாகனும்
அந்த வள்ளுவன் சொல்லிய இல்லறம்
என்கிற நல்லறம் காத்திடனும்

தங்கம் போல குணம் இருக்கனும்
தாய போல மனம் இருக்கனும்
மனசு போல வாய்ச்சிருக்கனும்
மனைவி பேச்ச கேட்டிருக்கனும்
அவனே தங்கமான புருஷன்

தாலிகட்டி வந்தவள
தலைக்கு மேல தூக்கிவச்சு
தாங்குவானே தங்கமான புருஷன்
ஒரு நிமிஷம் பிரிஞ்சிருந்தா
பல வருஷம் பிரிஞ்சதுபோல்
ஏங்குவனே தங்கமான புருஷன்

கொண்டவள ஊர்வசியா
மேனகையா தேவதையா
கொஞ்சுறவன் தங்கமான புருஷன்
கண்டவள எண்ணிடாம
ஆண்களிலே கண்ணகியா
வாழுறவன் தங்கமான புருஷன்

அதுபோல் இருந்தால்
அது மனைவி பாக்கியம்
அவன புகழ இங்கு
இல்ல வாக்கியம்

தங்கம் போல குணம் இருக்கனும்
தாய போல மனம் இருக்கனும்
மனசு போல வாய்ச்சிருக்கனும்
மனைவி பேச்ச கேட்டிருக்கனும்
அவனே தங்கமான புருஷன்

மூக்கும் முழியும் அமைஞ்சிருக்கனும்
பார்க்கும் படியா அழகிருக்கனும்
அத்த மாமனு மதிச்சிருக்கனும்
அன்பு பொங்கும் மனசிருக்கனும்
அவனே தங்கமான புருஷன்

சம்பளம் மொத்தமும் வீடு வந்தாகனும்
சம்சாரம் கையில அத தந்தாகனும்
அந்த வள்ளுவன் சொல்லிய இல்லறம்
என்கிற நல்லறம் காத்திடனும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *