பூவுக்குள் ஒளிந்திருக்கும் | Poovukkul Olinthirukkum Song Lyrics

Poovukkul Olinthirukkum Song Lyrics in Tamil from Jeans Movie. Poovukkul Olinthirukkum Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

பாடல்:பூவுக்குள் ஒளிந்திருக்கும்
படம்:ஜீன்ஸ்
வருடம்:1998
இசை:AR ரஹ்மான்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:உன்னிகிருஷ்ணன்,
சுஜாதா மோகன்

Poovukkul Olinthirukkum Lyrics in Tamil

ஆண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும்
கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில்
ஓவியங்கள் அதிசயம்

ஆண்: துளைசெல்லும் காற்று
மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத
குயில் பாட்டு அதிசயம்

ஆண்: அதிசயமே அசந்து போகும்
நீ எந்தன் அதிசயம்

ஆண்: கல்தோன்றி மண்தோன்றிக்
கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓ ஹோ
பதினாறு வயதான பருவத்தில்
எல்லோர்க்கும் படர்கின்ற
காதல் அதிசயம் ஓ ஹோ

பெண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும்
கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில்
ஓவியங்கள் அதிசயம்

பெண்: துளைசெல்லும் காற்று
மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத
குயில் பாட்டு அதிசயம்

ஆண்: அதிசயமே அசந்து
போகும் நீ எந்தன் அதிசயம்

பெண்: ஒரு வாசமில்லா கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவை பாா்
பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
சிறு துளிக்கூட உப்பில்லை
மழை நீரும் அதிசயமே

ஆண்: மின்சாரம் இல்லாமல்
மிதக்கின்ற தீபம்போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

பெண்: கல்தோன்றி மண்தோன்றிக்
கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓ ஹோ

பெண்: பதினாறு வயதான
பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ஓ ஹோ

ஆண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும்
கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில்
ஓவியங்கள் அதிசயம்

ஆண்: துளைசெல்லும் காற்று
மெல்லிசையாதல் அதிசயம்
பெண்: குருநாதர் இல்லாத
குயில் பாட்டு அதிசயம்

ஆண்: அதிசயமே அசந்து போகும்
நீ எந்தன் அதிசயம்

ஆண்: பெண்பால் கொண்ட சிறுதீவு
இரு கால்கொண்டு நடமாடும்
நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள்
வாய்பேசும் பூவே நீ
எட்டாவது அதிசயமே

ஆண்: வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெறிக்கும் கன்னங்கள்
பால் குடிக்கும் மதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற கிரீடம் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

ஆண்: கல்தோன்றி மண்தோன்றிக்
கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பெண்: ஓ ஹோ

பெண்: பதினாறு வயதான
பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

ஆண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும்
கனிக்கூட்டம்
பெண்: அதிசயம்
ஆண்: வண்ணத்துப் பூச்சி
உடம்பில் ஓவியங்கள்
பெண்: அதிசயம்

ஆண்: துளைசெல்லும் காற்று
மெல்லிசையாதல்
பெண்: அதிசயம்
ஆண்: குருநாதர் இல்லாத
குயில் பாட்டு
பெண்: அதிசயம்

ஆண்: அதிசயமே அசந்து போகும்
நீ எந்தன் அதிசயம்

Short Notes

பூவுக்குள் ஒளிந்திருக்கும்” என்ற பாடலானது 1998 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “ஜீன்ஸ்” என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் “பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், லட்சுமி, செந்தில்” ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையினை சங்கர் எழுதி இயக்கியுள்ளார். இதன் வசங்களை பாலகுமரன் எழுதியுள்ளார்.

இதனை அசோக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படத்தொகுப்பு பணிகளை B லெனின், VT விஜயன் ஆகிய இருவரும் மேற்கொண்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து இதன் அனைத்து பாடல் வரிகளையும் எழுத, இசை புயல் AR ரஹ்மான் பின்னணி இசையமைத்துள்ளனர்.

உன்னி கிருஷ்ணன், ஹரிஹரன், சுஜாதா மோகன், அனுராதா ஸ்ரீராம், நித்யஸ்ரீ மஹாதேவன், ஹரிணி முதலானோர் இதன் பாடல்களை பாடியுள்ளனர்.

இது 24 ஏப்ரல் 1998 அன்று திரையரங்குகளில் வெளியானது. மேலும் ஜீன்ஸ் திரைப்படம் பற்றி அறிய Wikipedia மற்றும் IMDb.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *