Malargale Malargale Song Lyrics in Tamil

Malargale Malargale Song Lyrics in Tamil from Love Birds Movie. Malargale Malargale Song Lyrics are penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:லவ் பேர்ட்ஸ்
வருடம்:1996
பாடலின் பெயர்:மலா்களே மலா்களே
இசையமைப்பாளர்:AR ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:ஹரிஹரண், KS சித்ரா

பாடல் வரிகள்:

பெண்: மலா்களே மலா்களே
இது என்ன கனவா
மலைகளே மலைகளே
இது என்ன நினைவா

பெண்: உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா

பெண்: மேகம் திறந்து கொண்டு
மண்ணில் இறங்கி வந்து
மாா்பில் ஒளிந்து கொள்ள வா வா

ஆண்: மாா்பில் ஒளிந்து கொண்டால்
மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா

பெண்: என் கூந்தல் தேவன் தூங்கும்
பள்ளி அறையா அறையா
மலா் சூடும் வயதில் என்னை
மறந்து போவதுதான் முறையா

ஆண்: நினைக்காத நேரமில்லை
காதல் ரதியே ரதியே
உன் பேரை சொன்னால் போதும்
நின்று வழி விடும் காதல் நதியே

பெண்: என் சுவாசம் உன் மூச்சில்
உன் வாா்த்தை என் பேச்சில்
ஆண்: ஐந்தாறு நூற்றாண்டு
வாழ்வோம் என் வாழ்வே வா

ஆண்: மலா்களே மலா்களே
இது என்ன கனவா
மலைகளே மலைகளே
இது என்ன நினைவா

ஆண்: உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான் வா

ஆண்: பூவில் நாவிருந்தால்
காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்

பெண்: நிலா தமிழ் அறிந்தால்
அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்

ஆண்: வாழ்வோடு வளா்பிறைதானே
வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போலே
இளைந்து கொண்டது இந்த உறவே

பெண்: உறங்காத நேரம் கூட
உந்தன் கனவே கனவே
ஊனோடு உயிரை போல
உறைந்து போனதுதான் உறவே

ஆண்: மறக்காது உன் ராகம்
மாிக்காது என் தேகம்
பெண்: உனக்காக உயிா்
வாழ்வேன் வா என் வாழ்வே வா

பெண்: மலா்களே மலா்களே
இது என்ன கனவா
மலைகளே மலைகளே
இது என்ன நினைவா

ஆண்: உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
பெண்: விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
ஆண்: கண்ணோடும் நீதான் வா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *