Sengathire Song Lyrics in Tamil from Kadaikutty Singam Movie. Sengathire Song Lyrics has penned in Tamil by Yugabharathi.
படத்தின் பெயர்: | கடைக்குட்டி சிங்கம் |
---|---|
வருடம்: | 2018 |
பாடலின் பெயர்: | செங்கதிரே செங்கதிரே |
இசையமைப்பாளர்: | D இமான் |
பாடலாசிரியர்: | யுகபாரதி |
பாடகர்கள்: | பிரதீப் குமார் |
பாடல் வரிகள்:
செங்கதிரே செங்கதிரே
தலை தொங்கியது யாராலே
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு காலாலே
செங்கதிரே செங்கதிரே
தலை தொங்கியது யாராலே
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு காலாலே
உயிர் வேதனை தரும் வார்த்தையை
உறவே நீ பேசுவதோ
குயில் வீட்டையே குடை சாய்த்திட
புயல் காற்று வீசுவதோ
விதியின் ஆட்டம் ஓயாதே
எதுவும் விளையாதே வாடாதே
செங்கதிரே செங்கதிரே
தலை தொங்கியது யாராலே
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு காலாலே
அன்னை மடி மீது தூங்கையிலே
தொல்லைகளும் ஏதடா
தந்தை நம்மை தாங்கும் வேளையிலே
கைகளிலே வானடா
தெரு மண்ணோடு நாம் நடந்தாலுமே
அழுக்கில்லாமலே இருந்தோம்டா
நிலை கண்ணாடியில் சிறு கீறல் போல்
பல துண்டாயின்று உடைந்தோம்டா
வயதாகும் போது நாமே
வழி மாறி போகிறோமே
செங்கதிரே செங்கதிரே
தலை தொங்கியது யாராலே
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு காலாலே
மொட்டு விடும் பூவை கட்டுவது
எப்பொழுதும் வாசமே
உள்ளவரை வாழ தேவையெது
உண்மையிலே பாசமே
இதை சொன்னாலும் தவறாகவே
பொருள் கொள்வோரிடம் நலமேதடா
உறவில்லாமலே ஒரு ஜீவனும்
உயிர் வாழதென உணர்வோமாட
வயலோடு வாழ நாமே
வரப்பாக மாறுவோமே
செங்கதிரே செங்கதிரே
தலை தொங்கியது யாராலே
சங்கடமோ சஞ்சலமோ
அதை எத்திவிடு காலாலே