Saayaali Song Lyrics in Tamil Font

Saayaali Song Lyrics in Tamil from Adanga Maru Movie. Kan Ketkum Kana Song Lyrics. Oh Saayaali Song Lyrics penned in Tamil by Sam CS.

படத்தின் பெயர்அடங்க மறு
வருடம்2018
பாடலின் பெயர்சாயாலி
இசையமைப்பாளர்சாம் சி.எஸ்
பாடலாசிரியர்சாம் சி.எஸ்
பாடகர்கள்சத்ய பிரகாஷ், சின்மயி
பாடல் வரிகள்:

குழு: கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா

ஆண்: என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

குழு: கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா

ஆண்: என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

குழு: கண் கேட்கும்…கனா
நெஞ்சுக்குள்…வினா

பெண்: உன் நகம் வர
சொல் முகவரி
உன் உடல் வர
ஏன் அனுமதி

பெண்: தீராத நேரம்
உன் கூட போதும்
மாயாத நாள் மட்டும்
நாம் வாழ வேணும்

பெண்: தீராத ஆசை
ஓயாமல் தோணும்
நாள் நேரம் பாராமல்
தோள் சாய வேணும்

ஆண்: ஓ சாயாலி ஓ சாயாலி
என்னுள் நீ பூகம்பம் செய்தாயடி

ஆண்: ஓ சாயாலி ஓ சாயாலி
என்னை நீ வேரோடு பேத்தாயடி

குழு: கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா

ஆண்: என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

குழு: கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா

பெண்: என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

பெண்: ஆழி போல் சூழ்ந்திடும்
அன்பிலான வீடு இது
ஓர் உயிர் போலவே
நாங்கள் வாழும் கூடு இது

ஆண்: ஆழி போல் சூழ்ந்திடும்
அன்பிலான வீடு இது
ஓர் உயிர் போலவே
நாங்கள் வாழும் கூடு இது

பெண்:  ஓ தூரத்து வானத்தில்
மழை போல சந்தோசம்
என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும்

ஆண்: பள்ளங்கள் இல்லாத
பாசங்கள் கொண்டு இங்கு
காற்றும் இங்கே தாலாட்டு மீட்கும்

பெண்: தேவைகள் வேற்றில்லை
நாங்களும் வாழ்ந்திட

ஆண்: அன்பினில் வாழ்கிறோம்
இன்பம் கூடிட

பெண்: நான் சாயாலி நான் சாயாலி
என்னுள்ளே பூகம்பம் செய்தாயே நீ

பெண்: நான் சாயாலி நான் சாயாலி
என்னை நீ வேரோடு பேத்தாயே நீ

ஆண்: நீ இல்லா நாழிகை
தீயில் வேகும் ஓர் நிலை
கூடவே நீ வர
கூறு நீயும் யோசனை

பெண்: தேய் நிலா ஆகிறேன்
தூரம் நீயும் போகையில்
வா உலா போகலாம்
கூடல் கூடும் வேலையில்

ஆண்: என் கண்ணின் சாரத்தில்
உன் பிம்ப மீறல்கள்
ஏனோ என்னை
தோற்பிக்க தானோ

பெண்: கண்ணாடி நெஞ்சம் மேல்
உன் அன்பின் பாரங்கள்
ஏனோ என் நெஞ்சை
சில்லாக்க தானோ

ஆண்: ஏன் இனி தாமதம்
வா உடன் வாழ்ந்திட

பெண்: நாட்களும் தீரும்முன்
சேர்வோம் வாழ்ந்திட

பெண்: நான் சாயாலி நான் சாயாலி
என்னுள்ளே பூகம்பம் செய்தாயே நீ

பெண்: நான் சாயாலி நான் சாயாலி
என்னை நீ வேரோடு பேத்தாயே நீ

ஆண்: கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

ஆண்: கண் கேட்கும் கனா
நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா
இன்பம் என்பேனா

ஆண்: சாயாலி
சாயாலி
ஓ சாயாலி
ஓ சாயாலி

ஆண்: சாயாலி
சாயாலி
ஓ சாயாலி
ஓ சாயாலி

ஆண்: அடியே சாயாலி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *