Megame O Megame Song Lyrics in Tamil from Madrasapattinam. Megame O Megame Song Lyrics penned in Tamil by Na.Muthukumar.
படத்தின் பெயர்: | மதராசபட்டினம் |
---|---|
வருடம்: | 2010 |
பாடலின் பெயர்: | மேகமே ஓ மேகமே |
இசையமைப்பாளர்: | ஜி.வி.பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | நா.முத்துகுமார் |
பாடகர்கள்: | எம்.எஸ்.விஸ்வநாதன், விக்ரம், நாசர், நா.முத்துகுமார், அஜயன் பாலா |
பாடல் வரிகள்:
ஆண்: மேகமே ஓ மேகமே
உன் மழையை கொஞ்சம் தூவாதே
மாலையில் அந்தி மாலையில்
உன்னை மறுபடி அழைப்போம் போகாதே
ஆண்: பக்கின்காம் கால்வாயில்
தண்ணீர்தான் நாம் கோயில்
அந்நாளும் வெளுத்துக்கட்டி வாழுவோம்
ஆண்: அட ஹோய்யா தள்ளிப்போயா
வெயில் போகும் முன்னே
வேலைய செய்வோம் வாயா
ஆண்: மேகமே ஓ மேகமே
உன் மழையை கொஞ்சம் தூவாதே
ஹேய் ஹேய்
மாலையில் அந்தி மாலையில்
உன்னை மறுபடி அழைப்போம் போகாதே
ஹேய் ஹேய்
குழு: சூரியன் உதிக்கும்போதே
சாயம் போட போவம்
சட்டுன்னு மழைத்துளி வந்தா
நாங்க தாயம் ஆடத்தான் போவோம்
ஆண்: வாடா வாடா வாடா
ஒரு தாயம்
ஆண்: ஆறு
ஆண்: வாடா வாடா வாடா
ஒரே ஒரு தாயம்
ஆண்: ஈராறு
ஆண்: வாடா வாடா வாடா
ஒரே ஒரு புள்ளி சே
குழு: நாங்க நொண்டி கழுதைமேல
நூறு மூட்டைப்போல
வாழ்க்கை வரும்போது நாங்க
வானம் தேடித்தான் போவோம்
ஆண்: சலவைக்காரன் வாழ்க்கை கூட
சாமிபோலதான்
உங்களோட பாவம்மூட்டை சுமப்போம்
அழுக்கோட வாழ்ந்தாலும்
நெஞ்சில்தான் அழுக்கில்லை
ஆகாயம் போல மனசு வெள்ளை
ஆண்: அட ஹோய்யா தள்ளிபோயா
வெயில் போகும் முன்னே வேலைய
செய்வோம் வாயா ஆ வாயா
குழு: கையில காசு இல்ல
மனசுல வேஷம் இல்ல
பொயில வாழ்க்க இல்ல
அதனால் கஷ்ட நஷ்டம்தான் இல்ல
குழு: ஹெலோ சார் டோரா
உன் சட்ட கர
என் கிட்ட வர
உட்டான் பார் அர
குழு: பள்ளிக்கூடம் பக்கம்
மழைக்கும் ஒதுங்கினது இல்ல
ஆண்: அனுபவ பாடம் படிச்சோம்
அதனால் வாழ்வீர் தோல்வி இல்லை
ஆண்: ஒரு மா கானி மா கானி
குழு: ஒரு மா கானி மா கானி
ஆண்: இரு மா கானி அரைக்கா
குழு: இரு மா கானி அரைக்கா
ஆண்: மும் மா கானி முண்டாணி
குழு: மும் மா கானி முண்டாணி
ஆண்: நா மா கானி கா
குழு: நா மா கானி கா
ஆண்: எம்டன் போட்ட குண்ட போல
வருமா சில நேரம்
பதுங்கி பாஞ்சி அடிக்கும்போதும்
பயமில்ல ஹே
ஆண்: தலை சாஞ்சு போனாலும்
தன்மானம் சாயாது
மண்ணோடு ஈரம் போல வாழ்வோம்
ஆண்: அட போய்யா தள்ளிபோயா
வெயில் போகும் முன்னே வேலைய
செய்வோம் வாயா
வாயா வாயா ஆ ஹோ ஹோ ஹோ
ஆண் : மேகமே ஓ மேகமே
உன் மழையில் கொஞ்சம் நனைவோமே
மாலையில் அந்தி மாலையில்
எங்க மனச உனக்கு தந்தோமே