Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Kolaru Pathigam Lyrics in Tamil

Kolaru Pathigam Lyrics in Tamil from Lord Shivan Songs. Kolaru Pathigam Lyrics has penned in Tamil by Thirugnanasambandar.

Kolaru Pathigam Lyrics in Tamil

வேயுறு தோளிபங்கன்
விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை
முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய்
புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல
அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே (1)

என்பொடு கொம்பொடாமை
இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை
புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்

ஒன்பது ஒன்றொடுஏழு
பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல
அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே (2)

உருவளர் பவளமேனி
ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள்
முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி
செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல
அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே (3)

மதிநுதல் மங்கையோடு
வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை
முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலன்அங்கி
நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல
அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே (4)

நஞ்சணி கண்டன்எந்தை
மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை
முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடு
உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல
அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே (5)

வாள்வரிய தளதாடை
வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை
நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்

கோளரி உழுவையோடு
கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல
அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே (6)

செப்பிள முலைநல்மங்கை
ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும்
முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும்வாத
மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல
அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே (7)

வேள்பட விழிசெய்துஅன்று
விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை
மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழ்இலங்கை
அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல
அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே (8)

பலபல வேடமாகும்
பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு
முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்

மலர்மிசையோன் மால்
மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல
அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே (9)

கொத்தலர் குழலியோடு
விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம்
முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்

புத்தரோடு அமணைவாதில்
அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல
அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே (10)

தேனமர் பொழில்கொள்ஆலை
விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய
பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளுநாளும்
அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும்
அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே (11)


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.