Kanave Urave Song Lyrics in Tamil from Plan Panni Pannanum Movie. Kanave Urave Song Lyrics has penned in Tamil by Niranjan Bharathi.
பாடலின் பெயர்: | கனவே கனவே |
---|---|
படத்தின் பெயர்: | பிளான் பண்ணி பண்ணனும் |
வருடம்: | 2020 |
இசையமைப்பாளர்: | யுவன் சங்கர் ராஜா |
பாடலாசிரியர்: | நிரஞ்சன் பாரதி |
பாடகர்: | ஸ்ரேயா கோஷல் |
Kanave Urave Lyrics in Tamil
கனவே கனவே
விழியில் நிகழா நிஜமே
உனை நான் இழந்தால்
நெருப்பில் எரியும் உயிரே
உறவே உறவே
சிறகை நீதான் கொடுத்தாய்
விண்ணை பார்த்தேன்
உடனே அதை நீ பறித்தாய்
இலக்கின்றி இதயங்கள் இயங்கிடுமா
இயங்கிட இதயமும் முயன்றிடுமா
வானமே வீழ்ந்ததே
எனந்நாளும் விடியாதே
மனதை சுடுமே
கொதிக்கும் கண்ணீர் மழையே
இருளில் அழியும்
எண்ணம் செல்லும் திசையே
வாழ்க்கை இனிமேல்
கொடியா தனிமை சிறையே
சொந்தம் இருந்தும்
எனக்கு வலியே துணையே
அழகிய ஆசையால் நானே
எனக்கொரு கல்லறை ஆனேன்
காற்றிலே ஓடிடும் துகளாய் போனேனே
விதையிலே பயிரை நான் கண்டேன்
செடியிலே துளிரை நான் கண்டேன்
பெண்களின் கனவுகள் கானல் நீர்தானே
விழுந்திடும் அலைகள் உயராதா
வலிகளில் வலிமை வாராதா
ரணங்களில் வலிகல் பிறக்காதா
சுட்டால் மின்னும் தங்கம் நானா
பூ மனது
கனவே கனவே
விழியில் நிகழா நிஜமே
உனை நான் இழந்தால்
நெருப்பில் எரியும் உயிரே
உறவே உறவே
சிறகை நீதான் கொடுத்தாய்
விண்ணை பார்த்தேன்
உடனே அதை நீ பறித்தாய்