Otha Nodi Paarvaiyil Song Lyrics in Tamil from Village Folk Songs. Otha Nodi Paarvaiyil Song Lyrics has penned in Tamil by Ajith Loganathan.
Otha Nodi Paarvaiyil Lyrics in Tamil
ஒத்த நொடி பார்வையிலே
கட்டி என்னை இழுத்தவனே
என்னோட ஆசை மாமனே
உன்னை கட்டிக்கொள்ள
ஆசை வைச்சேனே
கன்னங்குழி ஓரத்துல
காதல் முத்தம் நீயும் தர
நித்தம் நித்தம் பார்த்திருக்கிறேனே
நான் உனக்காக பூத்திருக்கிறேனே
உடலில் இருக்கும் உசுரா
நீ எனக்குள் வந்து சேர்ந்த
கொட்டி கிடைக்கும் ஆசை
அதை பாட்டா எடுத்து படிச்சேன்
ராமன் சீதைபோல ராசா
என்னை நீயும் ஆண்டிடனும்
ஒத்த நொடி பார்வையிலே
கட்டி என்னை இழுத்தவனே
என்னோட ஆசை மாமனே
உன்னை கட்டிக்கொள்ள
ஆசை வைச்சேனே
வேர்வை சிந்தி வேலை செஞ்சு
வீட்டுக்குள்ள நீயும் வந்தா
எண்ணெய் தேய்ச்சு குளிப்பாட்டி
முந்தானையில் தலை துவட்ட
அத்தை பெத்த ராசா நீ
அந்த வரம் கொடுத்திடய்யா
ஆயுசுக்கும் உன் நிழலா
உன் கூடவே வருவேன் அய்யா
மொட்டை மாடி நில
நாம்ம சேர்ந்து ரசிக்க வேணும்
என் எதிர நீயும் போக
உன்னை கட்டி அணைக்க வேணும்
இந்த பருவப்புள்ளை ஆசை
ஏன்டா உனக்கு புரியவில்லை
ஒத்த நொடி பார்வையிலே
கட்டி என்னை இழுத்தவனே
என்னோட ஆசை மாமனே
உன்னை கட்டிக்கொள்ள
ஆசை வைச்சேனே
பொட்டப்புள்ள இவ மனசு
பொட்டக்காட்டில் திரியுதடா
பொட்டு வைச்சு பூ முடிக்க
உன் வரவ பாக்குதடா
ஆயிரம்பேர் இருந்தாலும்
உன்னைப்போல யாரும் இல்லை
கண்ணை மூடி படுத்தாலும்
ராப்பகலா தூக்கம் இல்லை
தொட்டு நானும் குளிக்க
அட கிணத்து தண்ணி கிடைக்கு
இந்த மஞ்சள் தேய்ச்ச முகம்தான்
அந்த நாள பார்த்து இருக்கு
நீ காட்டும் தாலி கொடிய
இடுப்பில் முடிஞ்சு காத்திருக்கேன்
ஒத்த நொடி பார்வையிலே
கட்டி என்னை இழுத்தவனே
என்னோட ஆசை மாமனே
உன்னை கட்டிக்கொள்ள
ஆசை வைச்சேனே
கன்னங்குழி ஓரத்துல
காதல் முத்தம் நீயும் தர
நித்தம் நித்தம் பார்த்திருக்கிறேனே
நான் உனக்காக பூத்திருக்கிறேனே
உடலில் இருக்கும் உசுரா
நீ எனக்குள் வந்து சேர்ந்த
கொட்டி கிடைக்கும் ஆசை
அதை பாட்டா எடுத்து படிச்சேன்
ராமன் சீதைபோல ராசா
என்னை நீயும் ஆண்டிடனும்