Thendral Vanthu Theendum Pothu Song Lyrics

Thendral Vanthu Theendum Pothu Song Lyrics in Tamil from Avatharam Movie. Thendral Vanthu Theendum Pothu Song Lyrics has penned by Vaali.

பாடல்:தென்றல் வந்து
தீண்டும் போது
படம்:அவதாரம்
வருடம்:1995
இசை:வாலி
வரிகள்:இளையராஜா
பாடகர்:இளையராஜா,
S ஜானகி

Thendral Vanthu Theendum Pothu Lyrics in Tamil

ஆண்: தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

ஆண்: வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா

ஆண்: உண்மையம்மா
உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

ஆண்: தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

பெண்: விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது

ஆண்: எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

பெண்: ஓடை நீரோடை
இந்த உலகம் அதுபோல
ஆண்: ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அதுபோல

பெண்: நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

ஆண்: தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல

ஆண்: ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது

பெண்: ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது

ஆண்: குயிலே குயிலினமே
அந்த இசையா கூவுதம்மா
பெண்: கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா

ஆண்: கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

பெண்: தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
ஆண்: திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

பெண்: வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
ஆண்: எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா

பெண்: உண்மையிலே
உள்ளது என்ன என்ன
வண்ணங்கள் என்ன என்ன

ஆண்: தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

Leave a Comment

Your email address will not be published.